திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராகிறார் 21 வயது இளம்பெண்

கேரள மாநில தலைநகரின் மேயராக சாதாரண குடும்பத்தை சேர்ந்த 21 வயதான கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன் தேர்வாகி உள்ளார்.
திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராகிறார் 21 வயது இளம்பெண்
x
கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியிலும் 100 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவில், மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி 51 வார்டுகளை பெற்றது. இடது ஜனநாயக முன்னணி பெரும்பான்மை இடத்தை பிடித்துள்ள நிலையில், திருவனந்தபுரம் மேயர் வேட்பாளராக 21 வயதான ஆர்யா நடராஜனை அக்கட்சி தேர்வு செய்துள்ளது.  முடவன்முகள் வார்டு கவுன்சிலராக வெற்றிபெற்ற ஆர்யா ராஜேந்திரன், பிஎஸ்சி கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சாதாரண ஏழைக் குடும்பத்தில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வரும் ராஜேந்திரன் என்பவரின் மகளான இவர்,  மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பு அமைப்பான எஸ்எப்ஐ மாணவர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இவர் பதவியேற்றால் கேரளாவிலேயே குறைந்த வயது கொண்ட மேயராக விளங்குவார் என தெரிகிறது. 


Next Story

மேலும் செய்திகள்