தேசிய செய்திகளின் சிறு தொகுப்பு

ஜம்மு-காஷ்மீரில் நாளை (வருகிற 26 ஆம் தேதி) ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜெய் செஹத் திட்டத்தை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.
தேசிய செய்திகளின் சிறு தொகுப்பு
x
ஜம்மு-காஷ்மீரில் நாளை (வருகிற 26 ஆம் தேதி) ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜெய் செஹத் திட்டத்தை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். அனைத்து விதமான சுகாதாரப் பாதுகாப்பை இத்திட்டம் வழங்குவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

"தொழில்நுட்பத்தை முழு அளவில் மாநிலங்கள் பயன்படுத்த வேண்டும்"  - அமைச்சர் ஹர்ஷ் வர்தன் 

சிக்கல்களைத் தீர்ப்பதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை முழு அளவில் மாநிலங்கள் பயன்படுத்த வேண்டும்  என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில் பேசிய அவர், சமுதாயத்தின் சவால்களையும் அவற்றுக்கான தீர்வுகளையும் நாம் அனைவரும் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக கொரோனா பெருந்தொற்று அமைந்தது என குறிபிட்டார்.

"2021 ஜனவரி 1 முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்" - மத்திய அமை​ச்சர் நிதின் கட்கரி 

நாட்டில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் 2021 ஜனவரி 1 முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய நிதின் கட்கரி, தெரிவித்துள்ளார். 
காணொலி மூலம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பணம் செலுத்துவதற்காக சுங்கச்சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை என்ற காரணத்திற்காகவும், நேரம் மற்றும் எரிபொருள் சேமிப்புக்கு உதவுவதன் மூலமும் சாலைப் பணியாளர்களுக்கு இது பலனளிக்கும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்