துணை நிலை ஆளுநர் - முதல்வரின் கடித யுத்தம்

பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு 2500 ரூபாய் அறிவித்ததைபோல, புதுச்சேரியிலும் வழங்குவதற்கு துணைநிலை ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.
துணை நிலை ஆளுநர் - முதல்வரின் கடித யுத்தம்
x
பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு 2500 ரூபாய் அறிவித்ததைபோல, புதுச்சேரியிலும் வழங்குவதற்கு துணைநிலை ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தை தடை செய்துள்ளதைபோன்று, புதுச்சேரியிலும் தடை செய்ய வேண்டும் என முதலமைச்சருக்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு பதில் கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் நாராயணசாமி, பிரெஞ்சு கலாச்சாரம் என்பதால் புதுச்சேரி மக்கள் ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவது வழக்கம் என தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பிலிருந்து 97 புள்ளி 41 சதவிகிதம் பேர் குணமடைந்துள்ளதாகவும், தற்போது 178 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

எனவே மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி முகக்கவசம் அணிந்து கொண்டு, சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாட கடற்கரை சாலை திறந்து இருக்கும் என தெரிவித்துள்ளார்.

அரசின் அன்றாட நிகழ்வுகளில் ஆளுநர் தலையிடுவதை வழக்கமாக வைத்துள்ளதாக முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு 2 ஆயிரத்து 500 ரூபாய் பரிசுத்தொகை அறிவித்ததுபோல, புதுச்சேரியிலும் வழங்க துணை நிலை ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அடிப்படை தெரியாமல் பிறருக்கு துணைநிலை ஆளுநர் அறிவுரை கூறக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்