வேளாண் சட்டங்களில் திருத்தங்களை ஏற்கமாட்டோம் - விவசாயிகள் திட்ட வட்டம்

மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைக்கு நிபந்தனை விதித்துள்ள விவசாயிகள், திருத்தங்களை ஏற்கமாட்டோம் என திட்டவட்டமாக கூறிவிட்டனர்
வேளாண் சட்டங்களில் திருத்தங்களை ஏற்கமாட்டோம் - விவசாயிகள் திட்ட வட்டம்
x
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டிருக்கும் விவசாயிகளின் போராட்டம் 29-வது நாளை எட்டியுள்ளது. ஏற்கனவே நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் மத்திய அரசு, அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளை கேட்டுக்கொண்டது. இதுதொடர்பாக விவசாய அமைப்புகள் தொடர்ந்து ஆலோசனையை  மேற்கொண்டன. நேற்று விவசாய அமைப்புகளின் தலைவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில்,   நாங்கள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என்றும் அதற்கான வலுவான பரிந்துரைகளை எங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறினர். மேலும், பேச்சுவார்த்தைக்கு அரசு திறந்த மனதுடன் வரவேண்டும் என வலியுறுத்தினர். வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதாக கூறுவது அர்த்தமற்றது என்று கூறிய விவசாயிகள், அரசு கொண்டுவரும் திருத்தங்களை ஏற்கமாட்டோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும் கூறினர்.

அரசு காதல் கடிதங்கள் எழுதுவதை நிறுத்த வேண்டும் - விவசாயிகள்


உறுதியான பரிந்துரைகள் இருந்தால் மட்டுமே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். டெல்லியில் போராட்டம் நடத்தும் ஸ்வராஜ் அபியான் விவசாய அமைப்பு தலைவர் யோகேந்திர யாதவ் பேசுகையில், பேச்சுவார்த்தைக்கு அரசு ஒரு அடி எடுத்து வைத்தால் நாங்கள் 2 அடி எடுத்து வைப்போம் என்றும் இவ்விவகாரத்தில் காதல் கடிதங்கள் எழுதுவதை அரசு நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். நாங்கள் வேளாண் சட்டங்களை முற்றிலுமாக திரும்ப பெற வலியுறுத்தும் நிலையில் அரசு விவசாயிகளின் திருத்தங்களை மட்டும் புத்திசாலித்தனமாக முன்னிலை படுத்துகிறது என தெரிவித்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்