"இன்று முதல் ஜன.2 வரை இரவு நேர ஊரடங்கு" - கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடகாவில் இன்று முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இன்று முதல் ஜன.2 வரை இரவு நேர ஊரடங்கு - கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு
x
பிரிட்டனில் இருந்து, பெங்களூரு திரும்பிய தாய் மற்றும் 6 வயது மகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அது புதிய வைரசா என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து இன்று காலை முதல்வர் எடியூரப்பா தலைமையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் இன்று இரவு 10 மணி முதல் ஜனவரி இரண்டாம் தேதி காலை 6 மணி வரை மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். மேலும் வெளிநாட்டில் இருந்து பெங்களூரு மற்றும் மங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே அவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள், என்றும் அல்லது கடந்த 72 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை செய்துகொண்ட மருத்துவ அறிக்கை வைத்திருப்பவர்கள் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்