பெண்களை பணியமர்த்திய டெலிகாலர் நிறுவனம் - செயல்படாத பொருட்களை அனுப்பி மோசடி

சொகுசு வாழ்க்கையை லட்சியமாக கொண்டு பெண்கள் மூலம் நிறுவனம் தொடங்கி ஏமாற்றிய இளைஞரை போலீஸ் கைது செய்துள்ளது..
பெண்களை பணியமர்த்திய டெலிகாலர் நிறுவனம் - செயல்படாத பொருட்களை அனுப்பி மோசடி
x
உங்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு விழுந்துள்ளது. மூவாயிரத்து 750 ரூபாய் செலுத்தினால் போதும். 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு போன்கள் வழங்கப்படும். மடி கணினியும் பரிசாக விழும். விரைவாக செலுத்துங்கள் என குழைய குழைய வலை விரித்துள்ளது பெண்ணின் குரல். இதில், மயங்காத இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

ஒற்றைப் புகாரை வைத்துக்கொண்டு விசாரித்த ஆந்திர மாநிலம் சித்தூர் குற்றவியல் டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார், தொலைபேசி எண் மூலம், சித்தூர் மாவட்டம் பங்காரு பாளையம் பகுதியில் இருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். 

அங்கு நடத்திய அதிரடி சோதனையில், மினி ஐ.டி. நிறுவனம் போல் கால் சென்டர் இயங்கி வந்ததும், புகாரில் கூறியது போல், குழைய குழைய பேசிய 10க்கும் மேற்பட்ட பெண்களும் இருந்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்களை பணியமர்த்திய பாஸ் நம்பரை வழங்கி உள்ளனர். 

Breath..

தலா15 ஆயிரம் ரூபாய் மாத ஊதியம் பெறுவதாகவும், வேறு இடத்தில் இருந்து பார்சல் அனுப்புவதாகவும் அதிர வைத்தனர். மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மேல் ஊதியம், வீட்டு வாடகை வழங்கும் அளவுக்கு மோசடியில் கொழிக்கும் நபரை பிடிக்க தீர்மானித்தது போலீஸ். 

தொலைபேசி எண்கள் மூலம், பிஎம்.டபிள்யூ. காரில் சென்றவரை சுற்றி வளைத்து பிடித்த போலீசார், அவர் கையில் வைத்திருந்த உயர்ரக செல்போன், 53 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மொத்தம் 28 செல்போன்கள், கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். 

கிருஷ்ணகிரியில் இருந்து பழுதான, செயல்படாத மற்றும் டம்மி பொருட்களை அனுப்பிய வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த புதூரைச் சேர்ந்த செல்லத்துரையின் 39 வயது மகன் வெங்கடேசன்தான் இந்த சித்துவிளையாட்டின் தலைவன். சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட அவரை, சிறையில் அடைத்துள்ளது போலீஸ்.


Next Story

மேலும் செய்திகள்