உறவினர்கள் மத்தியில் அரசியல் முன்விரோதம் - இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல்
பதிவு : டிசம்பர் 19, 2020, 05:47 PM
தெலங்கானா மாநிலத்தில் அரசியல் முன்விரோதம் காரணமாக உறவினர்கள் மத்தியில் வெடித்த மோதல், துப்பாக்கிச்சூட்டில் முடிந்தது.
தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில், எம்.ஐ.எம். கட்சியின் மாவட்ட தலைவராக இருப்பவர் ஃபாரூக் அகமது. ததிகுடா பகுதியைச் சேர்ந்த இவரும், இவரது உறவினர்களும் பல ஆண்டுகளாக, எம்.ஐ.எம். கட்சியின் இணைந்து செயல்பட்டு வந்தனர். 

ஃபாரூக் அகமதுவின் உறவினர் குடும்பத்தினர், சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இணைந்தனர். இதனால், ஏற்பட்ட விரோதம், பலமுறை மோதல்களாக மாறியது. 

இந்த நிலையில்தான், நேற்று மாலை உறவினரின் குழந்தைகள் கிரிக்கெட் விளையாடியபோது, ஃபாரூக் அகமது தகராறு செய்துள்ளார். இதில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்து, கைகலப்பானது. 

அப்போது, ஒரு கையில் வாளும், மறு கையில் கத்தியும் கொண்டு, எதிர்த்தரப்பை ஃபாரூக் தாக்கத் தொடங்கியதும், அங்கே பரபரப்பு மூண்டது. துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்ட அதிர்ச்சி மீள்வதற்குள், அடுத்தடுத்து மூன்று பேர் சுருண்டு விழுந்தனர்.

பிற செய்திகள்

ராணுவ ரகசியங்கள் கசிந்த விவகாரம் : தீவிர விசாரணை வேண்டும் - ராகுல்காந்தி

இந்தியாவின் ராணுவ ரகசியங்கள் ஒரு பத்திரிகையாளருக்கு கொடுக்கப்பட்டது கிரிமினல் நடவடிக்கை என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

24 views

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் - ரூ.2,691 கோடி நிதியுதவி இன்று விடுவிப்பு

பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 6 லட்சத்து 10 ஆயிரம் பயனாளிக்கான நிதியுதவியை, பிரதமர் மோடி இன்று விடுவிக்க இருக்கிறார்.

32 views

570 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம் - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் தேர்தலின் போது இடது ஜனநாயக முன்னணி அளித்த 600 வாக்குறுதிகளில் 570 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

17 views

மாநில தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை -தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

17 views

ஜன.27, 28-ல் பி.சி.ஆர். பரிசோதனை - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்

பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் , மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தியுள்ளார்.

14 views

அகற்றப்படும் நாடாளுமன்ற வளாக காந்தி சிலை

சென்ட்ரல் வெஸ்டா திட்டத்தில் நாடாளுமன்ற புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது,. இதனால் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அகற்றப்பட்டு வேறு இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

84 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.