நாட்டை உலுக்கிய ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை - 2000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ
பதிவு : டிசம்பர் 19, 2020, 01:29 PM
நாட்டையே அதிர வைத்த ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
செப்டம்பர் 30, இரவு 2.30 மணி... உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராஸ் நகர் அருகே சிறிய கிராமம். 19 வயது அப்பாவி இளம்பெண் ஒருவரின் சடலம், காவல் துறையினரால் அனாதை பிணம் போல எரியூட்டப்பட, வீட்டுக்காவலில் இருந்த  அவரின் குடும்பத்தினர்  செய்வதறியாமல் கதற, அந்த காட்சிகள், நாட்டின் மனசாட்சியை உலுக்கின. 

கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி, பட்டியலினத்தை சேர்ந்த அந்த இளம்பெண், உயர்சாதி வகுப்பை சேர்ந்த நால்வரால் சாதிய வன்மத்துடன் கற்பழிக்கப்பட்டு, அந்த போராட்டத்தில் அந்த பெண்ணின் கழுத்து துப்பட்டாவால் நெரிக்கப்பட, அதனால் தண்டுவடத்தில் அடிபட்டு படுத்த படுக்கையாகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக டெல்லி அழைத்து சென்றும், சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். 

இளம்பெண்ணின் உயிரிழப்பிற்கு காரணமான நால்வரும் கைது செய்யப்பட்டாலும், பெண்ணின் உடலை பெற்றோரிடம் கூட காட்டாமல் அவசரகதியில் உ.பி., போலீசார் எரிக்க, விவகாரம் பெரும் விவாதப்பொருளானது.தொடர்ந்து, அம்மாவட்ட ஆட்சியர் பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அவர்களின் வாக்குமூலத்தை மாற்றச்சொல்ல, அந்த வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், உத்தரபிரதேச காவல்துறை அந்த பெண் கற்பழிக்கப்படவில்லை என்றும், இது அம்மாநிலத்தில் கலவரம் நிகழ்த்த செய்யப்பட்ட சதி என்றும் கூறி கேட்போரை கதிகலங்க வைத்தது. நடப்பவற்றை கண்டு சமூகவலைத்தளங்கள் தகிக்க, எதிர்க்கட்சிகளும் போராட்டத்தை முன்னெடுக்க, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் ராஷ்ட்ரிய சவர்ண சங்கத் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின.

ஒருபுறம், இந்த விவகாரம் மாநிலத்தின் பெயரை கெடுக்க நடக்கும் சர்வதேச சதி என சந்தேகம் கிளப்ப, மற்றொருபுறம், கற்பழிப்பு குற்றச்சாட்டு பொய் என்றும், இது ஆணவ கொலை என்றும், உயிரிழந்த பெண்ணின் நடத்தை குறித்தும் தொடர்ச்சியாக விமர்சித்தனர், குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஊர்மக்கள்.

தொடர் அழுத்தங்கள் காரணமாக, இவ்வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வருக்கும் எதிராக, 376, 376-A, 376-D, 302 மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டங்களின்கீழ் வழக்குப் பதிந்து,  2000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. 

அதில், அந்த இளம்பெண் கற்பழிக்கப்பட்டதும், கொடூரமாக தாக்கப்பட்டதால் உயிரிழந்ததையும் உறுதி செய்திருக்கிறது சிபிஐ. அப்பாவி பெண்ணின் மீது சுமத்தப்பட்ட அபாண்ட குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது இந்த குற்றப்பத்திரிக்கை என்ற ஆறுதல் ஒருபுறம் இருந்தாலும், மகளின் மரணத்திற்கு  நியாயம் வேண்டி காத்திருக்கும் குடும்பத்திற்கு நீதி கிடைப்பது எப்போது? என்ற கேள்வியே இங்கு பிரதானம்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

420 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

223 views

சாதனை மனிதர் 'ஜெப் பெசோஸ்'... கடந்துவந்த பாதை

அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் ஜெப் பெசோஸ் கடந்துவந்த பாதையை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

100 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

72 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

64 views

பிற செய்திகள்

போராட்டத்தை தடுத்ததால் போலீசார் மீது கல்வீச்சு

உத்தரகாண்டில் போராட்டத்தை தடுத்த போலீசார் மீது கல்வீச்சு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

19 views

60-வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பூசி அனுமதி - தடுப்பூசி செலுத்திக் கொண்டார் மோடி

பிரதமர் மோடியைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

44 views

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ.2,100 கோடி நிதி வசூல்

அயோத்தியில் ராமர் கோவில் 2 ஆயிரத்து 100 கோடி நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. கோவில் கட்ட நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிடவும் ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக வசூலாகியுள்ளது என அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

19 views

"கிராமங்களுக்கு அருகில் குளிர்பதன கிடங்கு" - பிரதமர் மோடி

விவசாயிகளின் கிராமத்திற்கு அருகிலேயே நவீன குளிர்பதன கிடங்குகளை அமைக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

12 views

"கேரளாவில் சட்டம் ஒழுங்கு கடும் பாதிப்பு" - நிர்மலா சீதாராமன்

கடவுளின் தேசமான கேரளா, இடதுசாரிகளின் ஆட்சியில் அடிப்படைவாதிகளின் தேசமாகியுள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

12 views

பாஜகவை நேரடியாக எதிர்கொள்ளாதது ஏன்? - ராகுல் காந்திக்கு பினராயி விஜயன் கேள்வி

திருவனந்தபுரத்தில் கட்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், ராகுல் காந்திக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.