கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தும் முறை - மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் விரிவான உத்தரவு

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் விரிவான உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தும் முறை - மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் விரிவான உத்தரவு
x
இது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், உணவகங்கள், காய்கறி சந்தைகள், பேருந்து, ரயில் நிலையங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக அளவிலான போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. தேவையற்ற நிகழ்ச்சிகளுக்கு போலீசார் அனுமதி அளிக்கக் கூடாது என்றும், அனுமதியுடன் நடைபெறும் நிகழ்ச்சிகளின் விவரங்களை போலீசார் ஆராய வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. கொரோனா பரிசோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும். ஊரடங்கு குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு முன்னரே தெரியப்படுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தேர்தல் பேரணி, பொதுக்கூட்டங்களை நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்