மர்ம நோய் தாக்கம் - 347 பேர் வாந்தி, வலிப்பு, மயக்கத்தால் பாதிப்பு

ஆந்திராவில் 347 பேரை தாக்கிய மர்ம நோய்க்கு, பூச்சிக்கொல்லி மருந்தே காரணம் என எய்ம்ஸ் மருத்துவ குழு வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மர்ம நோய் தாக்கம் - 347 பேர் வாந்தி, வலிப்பு, மயக்கத்தால் பாதிப்பு
x
ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரில், திடீரென பலர் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு வாந்தி, வலிப்பு ஏற்பட்டுள்ளது. 290 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் இறந்தார்.

என்ன நடக்கிறது என ஊகிப்பதற்குள், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 347 ஆக உயர்ந்தது. அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளால் வெடவெடத்துப் போனது பொதுமக்கள் மட்டுமல்ல, மருத்துவர்களும், அதிகாரிகளும்தான். 

பொதுவாக இளம் வயதினருக்கு உடல் வலிமை நிறைந்து காணப்படும் நிலையில், 20 முதல் 30 வயதினரே அதிகம் பாதித்துள்ளனர். ஏலூர் மருத்துவமனைக்கு வந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். என்ன நோய் பாதிப்பு என ஆய்வு செய்ய குழு அமைத்தார். 

மர்ம நோய்க்கு குடிநீர் மாசு காரணமாக இருக்கலாம் என சந்தேகித்தனர். கொசுவை கொல்லும் புகைமூட்டம் காரணமா என்றும் சந்தேகம் எழுந்தது. ஆனால், அரிசியில் பாதரசம் கலந்திருப்பதாகவும், காய்கறிகளில் அதிக அளவிலான பூச்சிக்கொல்லிகள் இருப்பதும் தான் காரணம் என ஹைதராபாத் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் அதிர வைத்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்