பாகிஸ்தானுக்கு எதிரான 1971 -ம் ஆண்டு போர் வெற்றியின் பொன் விழா கொண்டாட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

கிழக்கு பாகிஸ்தானை தனிநாடாக்க கோரி நடைபெற்ற போராட்டம் இந்தியா, பாகிஸ்தான் இடையே போராக உருவெடுத்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான 1971 -ம் ஆண்டு போர் வெற்றியின் பொன் விழா கொண்டாட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
x
கிழக்கு பாகிஸ்தானை தனிநாடாக்க கோரி நடைபெற்ற போராட்டம் இந்தியா, பாகிஸ்தான் இடையே போராக உருவெடுத்தது. கடந்த 1971 டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி தொடங்கிய இந்த போர் இருநாடுகளுக்கும் இடையே 16 ஆம் தேதி வரை நீடித்தது. இறுதியில், இந்தியாவிடம் பாகிஸ்தான் தளபதி 93 ஆயிரம் வீரர்களுடன் சரண் அடைந்தார். இந்த போரில் இந்திய ராணுவம் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் நாடு உருவானது. இரண்டாம் உலகம் போருக்கு பின்னர் ராணுவ வீரர்கள் மிகப் பெரிய அளவில் சரணடைந்தது இந்தப் போரில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போர் வெற்றியின் பொன்விழா ஆண்டு இன்று முதல் நாடு முழுவதும் கொட்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, டெல்லியில் உள்ள தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில், இந்த போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு பிரதமர், முப்படை தலைமை தளபதி, முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, அணையா ஜோதியில் இருந்து, பொன்விழா வெற்றி ஜோதியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றினார்.

1971 ஆம் ஆண்டு போரில் இந்தியா வெற்றி பெற்ற தினம் - நாட்டு மக்களுக்கு ராகுல்காந்தி வாழ்த்து

1971 ம் ஆண்டு இந்தியா மற்றும்  பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில். இந்தியா பெற்ற வெற்றி பெற்ற ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ள ராகுல் காந்தி, போரில் உயிர் நீத்த ராணுவத்தினருக்கு வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாக தமது பதிவில் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் இரும்பு பெண்மணி என நமது அண்டை நாடுகள் நம்பியது மட்டுமின்றி,  நமது நாட்டின் எல்லைகளை அத்துமீற அச்சம் கொண்டிருந்த காலம் அது எனவும் ராகுல் காந்தி சுட்டிக்காட்டி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்