தடுப்பூசிக்கு பின் பாதக முடிவுகள் வர வாய்ப்பு - மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை
இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு பாதகமான முடிவுகள் வர வாய்ப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு பாதகமான முடிவுகள் வர வாய்ப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முந்தைய காலங்களில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகளால் பக்க விளைவுகள் ஏற்பட்டு உள்ளதாகவும், மாநில அரசுகள் இதற்கு தயாராக இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. மேலும் நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் 1 புள்ளி45 சதவீதமாக குறைந்து உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. அதேநேரம் நாட்டில் 6 முன்னணி நிறுவன தடுப்பூசிகள் சோதனை ஓட்டத்தில் இருப்பதாக நிதி ஆயோக் தெரிவித்து உள்ளது.
Next Story

