மத்திய அரசின் பேச்சுவார்த்தை தோல்வி - போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாததால், டெல்லியில் விவசாய சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
மத்திய அரசின் பேச்சுவார்த்தை தோல்வி - போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு
x
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் 6 வது நாளாக தொடர்ந்து போராட்டன் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், 35 விவசாய குழுக்கள்  மற்றும் மத்திய அரசு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சு வார்த்தையில் மத்திய அரசு சார்பில், வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் மற்றும் அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் பங்கேற்றனர். புதிய  வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் எழுப்பியுள்ள பிரச்சினை குறித்து ஆராய ஒரு குழுவை அமைக்க மத்திய அரசு முன்வந்தது. ஆனால் 35 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளால் அது நிராகரிக்கப்பட்டது. இதனால் எந்தவொரு தீர்மானமும் இல்லாமல்  பேச்சுவார்த்தை முடிவடைந்தது. மீண்டும் நாளை பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு விடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்