தமிழகத்தின் நவம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் - ரூ.7,084 கோடி

நவம்பர் மாத மொத்த ஜிஎஸ்டி வருவாயாக ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 963 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் நவம்பர் மாத  ஜிஎஸ்டி வருவாய் - ரூ.7,084 கோடி
x
இது குறித்து மத்திய நிதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய ஜிஎஸ்டி வருவாய் 19 ஆயிரத்து 989 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி வருவாய் 25 ஆயிரத்து 540 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் 51 ஆயிரத்து 992 கோடி ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இவற்றில் மத்திய அரசின் பங்காக 22 ஆயிரத்து 293 கோடி ரூபாயும் மாநில அரசின் பங்காக 16 ஆயிரத்து 286 கோடி ரூபாயாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் தொடர்ச்சியாக பகிரப்பட்டு வருவதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு சேரவேண்டிய வழக்கமான தொகையை பகிர்ந்தளித்த பின்னர் நவம்பர் மாத நிகர வருவாயாக மத்திய அரசுக்கு 41 ஆயிரத்து 482 கோடி ரூபாயும் மாநில அரசுகளுக்கு வருவாயாக 41 ஆயிரத்து 826 கோடி ரூபாயும் கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்