உலகிற்கே கொரோனா தடுப்பூசி மலிவான விலையில் கிடைக்கும்

கொரோனா தடுப்பூசி மேம்பாட்டை துரிதப்படுத்த, கோவிட் சுரக்‌ஷா திட்டத்திற்கு 900 கோடி ரூபாய்க்கான நிதித் தொகுப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலகிற்கே கொரோனா தடுப்பூசி மலிவான விலையில் கிடைக்கும்
x
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி மேம்பாட்டுக்காக, கோவிட் சுரக்‌ஷா என்கிற திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் கொரோனா தடுப்பூசியின் ஆராய்ச்சிக்கு, உயிரி தொழில்நுட்பத் துறைக்கு வழங்கும் விதமாக 900 கோடி ரூபாய் நிதியுதவியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம், இறுதிகட்டத்தை எட்டியுள்ள 5 முதல் 6 தடுப்பூசிகள் விரைவாக உரிமம் பெற்று சந்தைக்கு வருவதை உறுதிப்படுத்தவும், தடுப்பூசி தயாரிப்பை துரிதப்படுத்தவும் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள, அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின், உயிரி தொழில்நுட்ப துறை செயலாளர் ரேணு ஸ்வரூப், இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியா மட்டுமின்றி, உலகிற்கே கொரோனா தடுப்பூசி மலிவான விலையில் கிடைப்பது உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்