இறுதி கட்டத்தில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணி - கொரோனா தடுப்பு மருந்து வினியோகம் செய்ய புதிய திட்டம்

கொரோனா தடுப்பு மருந்து வினியோகம் செய்வதற்காக புதிய செயலியை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இறுதி கட்டத்தில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணி -  கொரோனா தடுப்பு மருந்து வினியோகம் செய்ய புதிய திட்டம்
x
இந்தியாவில் கோவேக்சின் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு மருந்துகள் முக்கியமான இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.இறுதி முயற்சி வெற்றி பெற்று துரிதமாக அனுமதி கிடைக்கும் பட்சத்தில் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் மக்களுக்கு தடுப்பு மருந்து கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த நிலையில் தடுப்பு மருந்துகள் விநியோகம் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் பயன் பெற ஏதுவாக செயலி ஒன்றை துவங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது,. தடுப்பு மருந்து விநியோகம் தொடர்பான தகவல்கள் அனைத்தையும் மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்த செயலி இருக்கும் என கூறப்படுகிறது. எப்போது தடுப்புமருந்து வழங்கப்படும் , இதுவரை எத்தனை பேருக்கு  வழங்கப்பட்டுள்ளது போன்ற தகவல்களை இந்த செயலி பயனாளிகளுக்கு வழங்கும்,. மேலும்  தடுப்பு மருந்துகளுக்கு பின்னர் ஏதேனும் எதிர்மறையான விளைவுகள் தென்பட்டால் உடனடியாக அணுக வேண்டிய விஷயங்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் இந்த செயலியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது,.


Next Story

மேலும் செய்திகள்