கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியின் நிலை என்ன? - ஜைடஸ் உயிரி தொழில் நுட்ப பூங்காவில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் உயிரி தொழில் நுட்ப பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியின் நிலை என்ன? - ஜைடஸ் உயிரி தொழில் நுட்ப பூங்காவில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு
x
அகமதாபாத், ஐதராபாத் மற்றும் பூனேவில்  கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் மையங்களில் பிரதமர் நரே​ந்திர மோடி, இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொ​ள்கிறார். முதற்கட்டமாக குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்ற பிரதமர் மோடி, ஜைடஸ் உயிரி தொழில் நுட்ப பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள ஆராய்ச்சியாளர்களிடம், கொரோனா தடுப்பு மருந்திற்கான தயார் நிலை, சவால்கள் மற்றும் திட்டம் குறித்து பிரதமர்  மோடி கேட்டறிந்தார். இந்த ஆய்வகம் தயாரித்து வரும் சைகோவ் - டி என்னும், தடுப்பு மருந்து குறித்தும் பிரதமர் பல்வேறு தகவர்களை கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து, புனே மற்றும் ஐதராபாத் நகரங்களில் உள்ள ஆய்வகங்களிலும் பிரதமர் மோடி இன்று ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்