"அடுத்தக்கட்ட கொரோனா பரவல் சுனாமி போல இருக்கும்" - மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

அடுத்தக்கட்ட கொரோனா பரவல் சுனாமி போல இருக்கும் என மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.
அடுத்தக்கட்ட கொரோனா பரவல் சுனாமி போல இருக்கும் - மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை
x
அடுத்தக்கட்ட கொரோனா பரவல் சுனாமி போல இருக்கும் என மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார். முதல் கட்ட அலையை மக்கள் ஆதரவுடன் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ள உத்தவ் தாக்கரே, மக்களுக்கு கொரோனா தொடர்பாக அச்சம் அகன்றுள்ளது  குறித்து அச்சம் தெரிவித்துள்ளார். சில ஐரோப்பிய நாடுகள் மற்றும் டெல்லிஇ, அகமதாபாத் ஆகிய இடங்களில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட கொரோனா பரவல் தொடங்கி உள்ள நிலையில் மக்கள் எச்சரிக்கை உடன் விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தி உள்ளார். மாநிலத்தின் மக்கள் தொகை 12 கோடி என்றும், 2 முறை தடுப்பூசி போட வேண்டும் என்பதால் மகாராஷ்டிராவுக்கு 25 கோடி தடுப்பூசி தேவைப்படும் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி அனைவருக்கும் போட கால அவகாசம் தேவைப்படும் என்பதாலும், அதுவரை மருத்துவ, சுகாதார பணியில் உள்ளவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற அடிப்படையில் மக்கள் கவனமாக செயல்பட உத்தவ் தாக்கரே அறிவுறுத்தி உள்ளார். மருத்துவ பணியாளர்கள் கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை குறையும் நிலையில், யாராலும் நம்பை காப்பாற்ற முடியாது என்றும் மகாராஷ்டிர மக்களை, முதலமைச்சர் உத்தரவ் தாக்கரே எச்சரித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்