கொரோனா பரவல் தடுப்பு, தடுப்பூசி விநியோகம் - முதல்வர்களுடன் நாளை பிரதமர் ஆலோசனை
பதிவு : நவம்பர் 23, 2020, 10:46 AM
கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் நாளை பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா பரவல் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து நாளை, பிரதமர் நரேந்திர மோடி மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல்வர்களுடன் காணொலி மூலம்  ஆலோசனை நடத்த உள்ளார். 
கொரோனாவை கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்டு உள்ள நான்கு தடுப்பூசிகள்  இரண்டு மற்றும்  மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளில் உள்ளதாக கூறப்படும் நிலையில், தடுப்பூசி விநியோகம், அவசரக் கால அங்கீகாரம் ஆகியவை  குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மாநிலங்களுக்கு தேவையான நிதி பங்கீடு மற்றும் பள்ளி கல்லூரிகள் திறப்பது உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. இந்த ஆலோசனைக் கூட்டம் பல்வேறு கட்டங்களாக நடைபெறும் எனவும், முதல் கட்டமாக நாளை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நாளை பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

225 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

185 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

140 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

116 views

பிற செய்திகள்

சர்வதேச திரைப்பட விழா கோலாகல தொடக்கம் - பார்வையாளர்களை கவர்ந்த கண்கவர் கலை நிகழ்ச்சி

கோவாவில் 51 வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது

7 views

மாநிலங்களில் தடுப்பூசி திட்டம்...!

நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் அம்மாநில முதலமைச்சர்கள் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தனர்.

10 views

சிக்னல் செயலி செயல்பாட்டில் தொய்வு - பயனாளர்கள் அதிருப்தி

உலகம் முழுவதும் புது கவனம் பெற்றிருக்கும் சிக்னல் செயலியின் செயல்பாட்டில் தொய்வு காணப்பட்டதால் பயனாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

13 views

டெல்லியில் தடுப்பூசி திட்டம் தொடங்கியது - "வதந்திகளை நம்ப வேண்டாம்" கெஜ்ரிவால்

டெல்லியில் 81 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

10 views

தடுப்பூசி திட்டத்தை பிரதமர் தொடங்கிவைத்தார்

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

78 views

ஜனவரி 15 முதல் கால் செய்ய “பூஜ்ஜியம்“ (’0’) கட்டாயம்!

ஜனவரி 15ஆம் தேதி முதல் ’பூஜ்ஜியம்’(’0’) என்ற எண்ணை முன்னதாக டயல் செய்தால் மட்டுமே கால் செய்ய முடியும் என தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

57 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.