நீச்சலில் உலக சாதனை படைத்த இளைஞர் - கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் 10 கி.மீ நீச்சல்

கேரளாவில் இளைஞர் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பத்து கிலோமீட்டர் தூரம் ஏரியில் நீச்சலடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
நீச்சலில் உலக சாதனை படைத்த இளைஞர் - கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் 10 கி.மீ நீச்சல்
x
கேரள மாநிலம்  ஆலப்பாடு பகுதியை சேர்ந்த ரதீஷ், நீச்சலில் திறமையானவர். கடல் அலையில் சிக்கிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட ஏராளமானோரை காப்பாற்றியுள்ள அவருக்கு சிறந்த லைஃப் காட் என்ற விருதை கேரள சுற்றுலாத்துறை வழங்கியுள்ளது,. தினந்தோறும் 20 முதல் 30 கிலோ மீட்டர் வரை நீச்சலடிக்கும்  ரதீஷ்,  2007ஆம் ஆண்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் 2 கிலோ  மீட்டர் தூரம் ஏரியில் நீச்சலடித்து சாதனை படைத்தார்,. இந்த நிலையில் அவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில்   10 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரம் 11 நிமிடங்கள் 46 விநாடிகள் நேரத்தில் நீச்சல் அடித்து உலக சாதனை படைத்து கின்னஸ் சாதனை பட்டியலில்  இடம் பிடித்துள்ளார்,. அடுத்ததாக,  இங்கிலீஷ்  கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் 34 கிலோ மீட்டர் தூரம் நீச்சல் அடிப்பதே தனது லட்சியம் என ரதீஷ் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்