தொழிலதிபரை கொடூரமாக கொன்ற கும்பல் : உடலை சூட்கேஸில் வைத்து ரயிலில் அனுப்பிய பயங்கரம் - முறையற்ற உறவால் பறிபோன தொழிலதிபரின் உயிர்
பதிவு : நவம்பர் 20, 2020, 01:21 PM
டெல்லியில் முறையற்ற உறவு காரணமாக தொழிலதிபர் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் பெண் தோழி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லியில் முறையற்ற உறவு காரணமாக தொழிலதிபர் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் பெண் தோழி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைநகரில் நடந்த இந்த பகீர் சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன? இப்போது பார்க்கலாம்.

டெல்லியில் பிரபலமான தொழிலதிபர் என்ற அடையாளத்துக்கு சொந்தக்காரர் நீரஜ் குப்தா. 45 வயதான இவருக்கு, தன் நிறுவனத்தில் வேலை பார்த்த பைசல் என்ற 29 வயது பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. 

ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதை அறிந்தாலும் கூட பைசலும், குப்தா உடனான உறவை தொடர்ந்துள்ளார் பைசல். ஒரு கட்டத்தில் பைசலுக்கு ஜூபர் என்ற இளைஞருடன் காதல் ஏற்படவே, அவரை திருமணம் செய்யவும் திட்டமிட்டார். 

இந்த விவகாரம் நீரஜ் குப்தாவுக்கு தெரியவரவே, அவர் தன் காதலியை கண்டித்துள்ளார். தன்னை மீறி யாரையும் திருமணம் செய்யக் கூடாது என கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனால், தனக்கென ஒரு வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பைசல், அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த குப்தா, நேராக பைசல் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கே இருந்த பைசலின் வருங்கால கணவர் ஜூபர் மற்றும் பைசலின் தாய் ஆகியோர் செங்கல்லை எடுத்து குப்தாவின் தலையில் அடித்துள்ளனர். 

இதில் மயங்கி விழுந்த குப்தாவின் வயிற்றில் பலமுறை கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது உடலை ஒரு சூட்கேஸில் வைத்து அடைத்து அதை ரயிலில் ஏற்றி குஜராத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். நடந்த இந்த சம்பவங்கள் எல்லாம் ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்துள்ளது. 

குஜராத்திற்கு சென்ற உடலை யாருக்கும் தெரியாமலேயே அப்புறப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, கணவனை காணாமல் தவித்த குப்தாவின் மனைவி போலீசில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போது தான் நடந்த இத்தனை சம்பவங்களும் வெளிச்சத்திற்கு வந்தது. 

கடந்த 13 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் கிட்டத்தட்ட 6 நாட்களுக்கு பிறகு கொலையாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பைசலின் வருங்கால கணவர் ஜூபர் ரயில்வேயில் வேலை பார்த்து வருபவர் என்பதால் உடலை ரயிலில் அனுப்பி அப்புறப்படுத்தும் திட்டத்தை அரங்கேற்றியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

10 வருடங்களுக்கும் மேலாக பைசலுடன் முறையற்ற உறவில் இருந்த நீரஜ் குப்தா, இன்று அதே பெண்ணால் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.... 

தொடர்புடைய செய்திகள்

"வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்" - ராமதாஸ்

வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி போராட வேண்டும் என்றும், சமுதாயத்தினர் கருத்துச் சொல்லுமாறும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.

489 views

அமெரிக்க ராணுவத்தை வெளியேற்ற கோரிக்கை - ஈராக் மக்கள் சாலைகளில் ஆர்ப்பாட்டம்

ஈராக்கில் அமெரிக்க ராணுவ படைகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

178 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

97 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

80 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

50 views

பிற செய்திகள்

டாடா, பஜாஜ் நிறுவனங்கள் வங்கி தொடங்க திட்டம்?

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக சொத்து மதிப்பு கொண்ட, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை, வங்கிகளாக மாற்ற அனுமதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கியின் சிறப்பு குழு பரிந்துரை செய்துள்ளது.

23 views

2021, ஜனவரி 14-ல் தொடங்கும் கும்பமேளா விழா - முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்

வழக்கமான உற்சாகத்துடன் 2021 ஆம் ஆண்டு கும்பமேளா நடைபெறும் என உத்தராகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

8 views

மாணவர்கள் நலன் கருதி ரூ.1 கட்டண சிறப்பு பேருந்துகளை இயக்க கோரிக்கை

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் சிறப்பு பேருந்துகள் இயங்காததால் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

19 views

"அடுத்தக்கட்ட கொரோனா பரவல் சுனாமி போல இருக்கும்" - மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

அடுத்தக்கட்ட கொரோனா பரவல் சுனாமி போல இருக்கும் என மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.

392 views

சபரிமலை ஐயப்பன் கோயில் சாமி தரிசனம் - 2,000 முதல் 5,000 பக்தர்களை அனுமதிக்க முடிவு ?

சபரிமலை ஐய்யப்பன் கோயில் சாமி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

24 views

கொரோனா பரவல் தடுப்பு, தடுப்பூசி விநியோகம் - முதல்வர்களுடன் நாளை பிரதமர் ஆலோசனை

கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் நாளை பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.