லடாக் யூனியன் பிரதேசம் வரைபட சர்ச்சை - டுவிட்டர் நிறுவனம் மன்னிப்பு கோரியது

இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசம் சீனாவில் இருப்பது போன்ற சர்ச்சைக்குரிய வரைபடம் வெளியான விவகாரத்தில் டுவிட்டர் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
லடாக் யூனியன் பிரதேசம் வரைபட சர்ச்சை - டுவிட்டர் நிறுவனம் மன்னிப்பு கோரியது
x
டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டிருந்த இருப்பிட அமைப்பில், இந்தியாவின் லடாக் சீனாவின் ஒரு பகுதியாக குறிப்பிடப்பட்டு இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. மேலும் இது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் அறிவுறுத்தியது. இதுதொடர்பாக நாடாளுமன்றக்குழு விசாரித்த நிலையில், தற்போது டுவிட்டர் நிறுவனம் எழுத்துப்பூர்வமான மன்னிப்பை கேட்டுள்ளது. இதுதொடர்பாக குழுவில் இடம்பெற்றிருக்கும் பாஜக எம்.பி. மீனாட்சி லேகி பேசுகையில், டுவிட்டர் நிறுவனம் தாக்கல் செய்த அபிடவிட்டில் இந்தியர்களின் உணர்வுகளை காயப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது என்றும் வரைப்படத்தில் இருக்கும் தவறை நவம்பர் 30-ம் தேதிக்குள் சரிசெய்து விடுவோம் என உறுதியளித்து உள்ளது என்றும் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்