இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் - குளிர்காலத்திலும் பதிலடியை கொடுக்க படைகள் குவிப்பு

சீன எல்லையில் நிறுத்தப்பட்டு உள்ள வீரர்களுக்கு கடும் குளிரையும் தாங்கும் வகையிலான இரும்பிலான கூடாரங்களை இந்திய ராணுவம் உருவாக்கி கொடுத்துள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் - குளிர்காலத்திலும் பதிலடியை கொடுக்க படைகள் குவிப்பு
x
லடாக் எல்லைப் பகுதியில் கடந்த மே மாதம் முதல், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர்ப் பதற்றம் நீடித்து வருகிறது. இருதரப்பில் ராணுவம் மற்றும் ராஜ்ஜிய ரீதியிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும் எல்லையில் நிலைமை சரியாகவில்லை. இதனையடுத்து குளிர்காலத்திலும் சீனாவிற்கு பதிலடியை கொடுக்கும் வகையில் இந்தியா, படைகளையும், ஆயுதங்களையும் குவித்ததுடன் டாங்கிகளையும் நிலை நிறுத்தியது. மேலும், குளிர் காலத்தில் மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உறைய வைக்கும் பனி நிலவும் பகுதியில் வீரர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. வீரர்களுக்கு தேவையான குளிர் தாங்கும் உடைகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவம் வீரர்களுக்கு, கடும் குளிரையும் தாங்கும் வகையிலான இரும்பிலான கூடாரங்களை உருவாக்கி கொடுத்துள்ளது. இந்த கூடாரங்களில் வீரர்களுக்கு மெத்தை மற்றும் ஹீட்டர் வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், மின்சாரம், தண்ணீர் வசதி, சமையல் செய்வதற்கான வசதிகள் மற்றும் கழிவறைகள் கட்டமைப்பு போன்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துக் கொடுத்து உள்ளது. இந்த வசதிகள் அடங்கிய கூடாரங்களின் வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்