மோடி வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்த வழக்கு - தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மோடி வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்த வழக்கு - தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
x
மோடியை எதிர்த்து போட்டியிட்ட பி.எஸ்.எஃப். வீரர் தேஜ் பகதூரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, தொடரப்பட்ட  மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. பிரதமர் தரப்பில் ஹரிஷ் சால்வே ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்ற தேஜ் பகதூரின் வழக்குரைஞர் பிரதீப் யாதவ் மீண்டும் வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்த,  தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தொடர்ந்து வாதிட  உத்தரவிட்டதோடு , 5 நிமிடம் அவகாசம் அளித்தார். மேலும், இந்த வழக்கு நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ளதாக தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, வாதங்களை முன் வைக்க வேண்டும் என்றும்,  அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அவகாசம் கோரியதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைப்பதாக இல்லை என்ற தலைமை நீதிபதி போப்டே அமர்வு, உச்சநீதிமன்றத்தில் இதுபோல நடந்து கொள்ள கூடாது என தேஜ் பகதூரின் வழக்குரைஞர் பிரதீப் யாதவிடம் தெரிவித்தனர். அவர் வாதாட முன்வராத நிலையில்,  வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஒத்திவைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்