கொரோனா தடுப்பூசிகளும்... இந்தியாவுக்கான சவால்களும்...
பதிவு : நவம்பர் 18, 2020, 11:28 AM
கொரோனாவுக்கு எதிராக வெற்றிகரமாக செயல்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ள 2 தடுப்பூசிகளையும் செயல்திறனுடன் பயனாளர்களுக்கு கொண்டு செல்வதில் இந்தியாவிற்கு பல்வேறு சவால்கள் நிறைந்திருக்கிறது.
உலகில் 50-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் மனித பரிசோதனையில் இருந்தாலும், அமெரிக்காவின் ஃபைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் தடுப்பூசி முறையே 90 மற்றும் 94.5 சதவிகிதம் பயனளிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மெசஞ்சர் ஆர்.என்.ஏ. அடிப்படையிலான இந்த இரு தடுப்பூசிகளும் மனித செல்களையே, சொந்தமாக எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலை ஏற்படுத்துகிறது. இதுவரையில் பரிசோதனையில் மட்டுமே இருந்த மெசஞ்சர் ஆர்.என்.ஏ. வகையிலான தடுப்பூசிகள் கொரோனா கோரத்தால் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.
 
மாடர்னா நிறுவனம் தன்னுடைய தடுப்பூசி விலையை ஒரு டோஸ்  2 ஆயிரத்து 750 ரூபாய் என்றும்   ஃபைசர் நிறுவனம்  2 ஆயிரத்து 900 ரூபாய் என்றும் அறிவித்து உள்ளன. இரண்டுமே இருமுறை போட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.என்.ஏ. அடிப்படையிலான இந்த தடுப்பூசிகளை தயாரிக்கும் இடம் தொடங்கி, பயனாளிக்கு செலுத்தும் காலம் வரையில் குளிரான சூழலில் பராமரித்தால் மட்டுமே செயல்திறன் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இதுதான் இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளுக்கு மிகவும் சவாலானது எனக் கூறப்படுகிறது.  

இதில் மாடர்னா தடுப்பூசியை மைனஸ் 36 டிகிரியில் பராமரித்தால்  30 நாட்கள் வரையில் செயல்திறனுடன் இருக்கும் என்றும் தடுப்பூசியை 4 வார கால இடைவெளியில் மனித உடலில் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுவே மைனஸ் 70 டிகிரியில் குளிரூடப்பட்ட ஃபைசர் தடுப்பூசி 5 நாட்கள் வரையில் செயல்திறனுடன் இருக்கும் என்றும் 21 நாட்கள் இடைவெளியில் மனித உடலில் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.   
 
தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக சரியாக செயல்பட அதனை இருப்பு வைப்பது, போக்குவரத்து மற்றும் மருத்துவமனையில் குளிர் பதன வசதி மிகவும் அவசியமாகும். தற்போது இந்தியாவில் தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைத்திருக்க 2-லிருந்து 8 டிகிரி செல்சியஸ் வரையிலான குளிர்சாதன வசதியே இருக்கிறது எனக் கூறப்படுகிறது. 

130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பயனாளர்களுக்கு தடுப்பூசியை செலுத்துவதற்கு போதுமான சுகாதார பணியாளர்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நீண்ட நேரம் குளிரூட்டும் வகையிலான உறையவைக்கும் பெட்டிகளை அதிகரிக்க வேண்டியது கட்டாயமாகும்.

எய்ம்ஸ் மருத்துவர் ரந்தீப் குலெரியா கூறுகையில், இதுபோன்ற மிகவும் குறைந்த வெப்ப நிலையில் மருந்தை இருப்பு வைத்து பராமரிக்கும் கட்டமைப்பு இந்தியாவில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  ஃபைசர் நிறுவனத்தின் மருந்தை வாங்கினால் அதனை எப்படி இருப்பு வைக்கலாம் என்பதற்கான சாத்திய கூறுகள் தொடர்பாக ஆய்வு செய்வதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

225 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

185 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

138 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

116 views

பிற செய்திகள்

மாநிலங்களில் தடுப்பூசி திட்டம்...!

நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் அம்மாநில முதலமைச்சர்கள் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தனர்.

10 views

சிக்னல் செயலி செயல்பாட்டில் தொய்வு - பயனாளர்கள் அதிருப்தி

உலகம் முழுவதும் புது கவனம் பெற்றிருக்கும் சிக்னல் செயலியின் செயல்பாட்டில் தொய்வு காணப்பட்டதால் பயனாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

11 views

டெல்லியில் தடுப்பூசி திட்டம் தொடங்கியது - "வதந்திகளை நம்ப வேண்டாம்" கெஜ்ரிவால்

டெல்லியில் 81 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

10 views

தடுப்பூசி திட்டத்தை பிரதமர் தொடங்கிவைத்தார்

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

77 views

ஜனவரி 15 முதல் கால் செய்ய “பூஜ்ஜியம்“ (’0’) கட்டாயம்!

ஜனவரி 15ஆம் தேதி முதல் ’பூஜ்ஜியம்’(’0’) என்ற எண்ணை முன்னதாக டயல் செய்தால் மட்டுமே கால் செய்ய முடியும் என தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

57 views

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - துணைநிலை ஆளுநர் மாளிகை முற்றுகை

வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர், டெல்லியில் உள்ள துணை நிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டனர்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.