ரூ.1,000 கோடி செலவில் முல்லை பெரியாறில் புதிய அணை - திட்ட அறிக்கையை செயல்படுத்த குழு அமைக்க கேரள அரசு முடிவு
பதிவு : நவம்பர் 17, 2020, 07:01 PM
ஆயிரம் கோடி ரூபாய் செலவில் முல்லைப் பெரியாறில், கேரள அரசு புதிய அணைக்கட்டும் பணியை தீவிரப்படுத்தி வருவது 5 மாவட்ட விவசாயிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் உட்பட 5 மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக இருப்பது முல்லைப் பெரியாறு அணை. இந்த  அணை தமிழக - கேரள எல்லையில் அமைந்து உள்ளது. இங்கு புதிய அணை கட்ட கேரள அரசு முன்பு  முடிவு செய்தது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தமிழகத்தின் எதிர்ப்பை மீறி கடந்த 2011 -ல் கேரள அரசு அணையை கட்ட திட்ட அறிக்கையை தயாரித்தது. 663  கோடி செலவில் நான்குஆண்டுகளில் அணை கட்டி முடிக்கும் வகையில்  திட்டம் தயாரிக்கப்பட்டு இருந்தது.  தற்போதுள்ள அணையில் இருந்து 366 மீட்டர் தொலைவில், பெரியாறு புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதியில் புதிய அணை கட்ட இடமும்  தேர்வு செய்யப்பட்டது. அணை கட்டுவதற்கு முன்னோடியாக 2014-ல் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரியது கேரள அரசு. நான்கு  ஆண்டுகளுக்கு பின்னர் மத்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தது.  கேரள அரசின் புதிய அணை கட்டும்  முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு  வழக்கு தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து, கேரள அரசு தனது முடிவை தற்காலிகமாக  நிறுத்தி வைத்தது. இந்நிலையில் அணை கட்டுவதற்கான ஆய்வு பணிகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து புதிய  அணை கட்டுவதற்கான ஆய்வு பணிகளை தொடங்க கேரள அரசு மீண்டும் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நீர்வளத் துறையின் கீழுள்ள நீர்ப்பாசனம், வடிவமைப்பு மற்றும் ஆய்வு வாரிய கூடுதல்  தலைமைச் செயலாளர் ஜோஸிடம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. புதிய அணையை ஆயிரம் கோடி ரூபாய் செலவில்  கட்ட  திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட உள்ள நிலையில், தற்போது புதிதாக திட்ட அறிக்கை தயாரிக்கவும், அதனை அமல்படுத்த குழு ஒன்றை அமைக்கவும் கேரள அரசு திட்டமிட்டுள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கை தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள தங்களின்  வாழ்வாதாரத்தை பாதிக்கும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

271 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

224 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

169 views

பிற செய்திகள்

"ரூ.13 ஆயிரத்திற்குப் பதில் ரூ.5.44 லட்சம் கல்விக் கட்டணம் வசூலிப்பதா?" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம்

சில அரசு மருத்துவக் கல்லூரிகளில் 13 ஆயிரத்திற்குப் பதில் 5 லட்சத்து 44 ரூபாய் கல்விக்கட்டணம் வசூலிப்பதா? என கேள்வி எழுப்பியுள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அங்கு கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

82 views

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த நிலை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த நிலை உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

429 views

போலி சான்றிதழ் கொடுத்து மீனாட்சி அம்மன் கோயிலில் பணி - மோசடி செய்த பெண் ஊழியர் பணியிடை நீக்கம்

மதுரையில் போலி சான்றிதழ் கொடுத்து மீனாட்சி அம்மன் கோயிலில் வேலைக்கு சேர்ந்த பெண் ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

584 views

"டிச.15க்குள் 2000 மினி கிளினிக் தொடங்கப்படும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகம் முழுவதும் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் மினி கிளினிக் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

284 views

மருத்துவ கலந்தாய்வு தொடர்பாக மனு தாக்கல் - 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை சேர்க்க கோரிக்கை

2020-21 ஆம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பிற்கான மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை கலந்தாய்வு பட்டியலில் சேர்க்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

5 views

செல்போன் திருடர்களை விரட்டி பிடித்த காவல் உதவி ஆய்வாளர் - சிசிடிவி கேமராவில் பதிவான அதிரடி காட்சிகள்

சென்னையில் செல்போன் திருடர்களை விரட்டிப் பிடித்த காவல் உதவி ஆய்வாளரை, நிஜ ஹீரோ என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டியுள்ளார்.

972 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.