ஆண்டுதோறும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம் - வீரர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த பிரதமர்
பதிவு : நவம்பர் 15, 2020, 08:33 AM
தீபாவளிப் பண்டிகையை, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவை யாரேனும் தீய நோக்கத்துடன் சீண்டினால், ராணுவ வீரர்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றார்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையின் போது, ஏதாவதொரு ராணுவ முகாமில் பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி வருகிறார். 2014ஆம் ஆண்டு லடாக்கில் உள்ள சாய்ச்சென் முகாமிற்கு சென்றது முதல், தற்போது வரை அவர் இதை மேற்கொண்டு வருகிறார்.

தீபாவளி நாளில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ தளபதி முகுந்த் நரவனே உடனிருக்க, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள லாங்கேவாலா முகாமிற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. 

இதையடுத்து, இந்திய ராணுவத்துக்கு சொந்தமான பீரங்கியில் பயணம் செய்த பிரதமர் மோடி லாங்கிவாலா முகாமில் வலம்வந்தார். அப்போது அவர் ராணுவ உடை அணிந்திருந்தார். பாதுகாப்பு பணியின் போது, வீர மரணம் அடைந்து, உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பின்னர், ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி இனிப்பு வழங்கி, வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டார். 

அங்கு ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவை யாரேனும் தீய நோக்கத்துடன் சீண்டினால், ராணுவ வீரர்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றார். சர்வதேச அளவில், தங்களது நாட்டின் எல்லைகளை விரிவுப்படுத்தும் எண்ணம் அதிகரித்துள்ளதாகவும் இது தற்போது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். எல்லைப்பகுதியை ஆக்கிரமிக்க முயற்சித்தவர்களை இந்தியா ஓட ஓட விரட்டியதாக சீனாவை பிரதமர் மோடி மறைமுகமாக சாடினார். வல்லரசு நாடுகளுடன் இணைந்து இந்திய வீரர்கள் போர் பயிற்சி எடுத்து வருவதாகவும், அந்த நாடுகளுடன் இணைந்து, தீவிரவாதத்தை ஒழிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 


இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி லாங்கிவாலா முகாமில் உள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அடுத்ததாக, விமானப்படை வீரர்களின் முகாமிற்கு சென்று, விமானப்படை வீரர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர், உத்தர்காண்ட், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப் முகாம்கள் வரிசையில், பிரதமர் மோடியின் தீபாவளி கொண்டாட்டத்தில், ராஜஸ்தான் முகாமும் சேர்ந்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

263 views

மத்திய அரசின் பேச்சுவார்த்தை தோல்வி - போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாததால், டெல்லியில் விவசாய சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

15 views

பிற செய்திகள்

இந்தியாவிற்கு படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள்

குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் செர்பியா, ரஷ்யா மற்றும் பிற குளிர்பிரதேச நாடுகளில் இருந்து உணவு தேடி பறவைகள் தெற்கு ஆசியாவிற்கு படையெடுத்துள்ளன.

14 views

மத்திய அரசின் பேச்சுவார்த்தை தோல்வி - போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாததால், டெல்லியில் விவசாய சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

15 views

பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி - ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கியது

கப்பல்களை தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணை இந்திய கடற்படையால் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

38 views

தமிழகத்தின் நவம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் - ரூ.7,084 கோடி

நவம்பர் மாத மொத்த ஜிஎஸ்டி வருவாயாக ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 963 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

12 views

5ஜி சேவை விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் - எரிக்சன் நிறுவனத்தின் அறிக்கையில் தகவல்

தற்போது பயன்பாட்டில் உள்ள 4ஜி அலைபேசி சேவைகளுக்கு அடுத்த கட்டமாக, 5ஜி சேவைகள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

269 views

கனடா தலைவர்களின் கருத்து தேவையற்றது - இந்திய வெளியுறவுத் துறை கண்டனம்

இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து கனடா தலைவர்களின் கருத்து, தவறான தகவல் மட்டுமின்றி அதை தேவையற்றதும் கூட என்று, வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.