எதிரி விமானங்களை தாக்கி அழிக்கும் அதிவிரைவு ஏவுகணை - இலக்கு நோக்கி செலுத்தப்பட்ட ஏவுகணை பரிசோதனை வெற்றி

எதிரி விமானங்களை தாக்கி அழிக்கும் இந்திய அதி விரைவு எதிர் வினை ஏவுகணை பரிசோதனை வெற்றி அடைந்துள்ளது.
எதிரி விமானங்களை தாக்கி அழிக்கும் அதிவிரைவு ஏவுகணை - இலக்கு நோக்கி செலுத்தப்பட்ட ஏவுகணை பரிசோதனை வெற்றி
x
எதிரி விமானங்களை தாக்கி அழிக்கும் இந்திய அதி விரைவு எதிர் வினை ஏவுகணை பரிசோதனை வெற்றி அடைந்துள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில், ஏவப்பட்ட இந்த ஏவுகணை, தரையில் இருந்து வான் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் பெற்றது. இந்த ஏவுகணையை ஏவிய உடன், முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கு வெற்றிகரமாக தாக்கி அழிக்கப்பட்டது. 
இந்த ஏவுகணை மணிக்கு 5 ஆயிரத்து 803 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து சென்று இலக்கை தாக்கியதாக டி.ஆர்.டி.ஓ வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை அனைத்து காலநிலைகளிலும், அனைத்து இடங்களிலும் இருந்து ஏவக்கூடியது. லடாக் எல்லையில் இந்த ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்