சூரரைப் போற்று படக்குழுவினருக்கு இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத் வாழ்த்து
பதிவு : நவம்பர் 13, 2020, 05:48 PM
மாற்றம் : நவம்பர் 13, 2020, 05:52 PM
சூரரைப் போற்று படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிய சூரரைப் போற்று படம் அமேசான் ஓடிடியில் வெளியாகி உள்ளது. படத்தை பார்த்துவிட்டு கோபிநாத் தன்னுடைய டுவிட்டரில் படக்குழுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். அவர் தன்னுடைய டுவிட்டர் பதிவில், சூரரைப் போற்று படத்தில் நிறையக் கற்பனைகள் இருந்தாலும், என்னுடைய புத்தகத்தின் மைய கருவை அற்புதமாக படம் பிடித்துள்ளது. நேற்றிரவு படத்தை பார்த்தேன். உண்மையான ரோலர் கோஸ்டர் அனுபவமாகும்.  நினைவுகளை தூண்டிய பல குடும்ப காட்சிகளில் என்னால் சிரிப்பையும் அழுகையையும் கட்டுப்படுத்த முடியவில்லை எனக் கூறி உள்ளார். மேலும், என்னுடைய மனைவி பார்கவியாக சித்தரிக்கப்பட்டு இருக்கும் அபர்ணா சரியான தேர்வு என்றும்  தொழில்முனைவோர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா சக்திவாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என்றும் கூறியுள்ளார்.  சுதா கொங்கராவுக்கு மிகப்பெரிய சலூட்டை வைப்பதாக கூறியிருக்கும் அவர், இருண்ட காலங்களில் உத்வேகம் அளிக்கக் கூடிய திரைப்படம் எனக் குறிப்பிட்டு உள்ளார்.  இதற்கு பதில் டுவிட் செய்துள்ள நடிகர் சூர்யா, மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது கேப்டன்.. இந்த நாட்டிற்காக நீங்கள் செய்த பணிக்காக எங்களுடைய சிறிய வழியில் மரியாதை செலுத்தியுள்ளோம். பலரும் உத்வேகம் அடைவார்கள் என நம்புகிறோம் எனக் குறிப்பிட்டு உள்ளார்.
---

தொடர்புடைய செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

270 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

224 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

169 views

பிற செய்திகள்

இந்திய பொருளாதாரம் 7.5 சதவீதம் சரிவு - மீட்சிப்பாதையில் நாட்டின் உற்பத்தி துறை

இரண்டாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 7.5 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

12 views

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - புராரி மைதானத்தில் போராட்டத்தை துவக்கிய விவசாயிகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் டெல்லி புராரி மைதானத்தில் குவிந்து வருகின்றனர்.

15 views

கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியின் நிலை என்ன? - ஜைடஸ் உயிரி தொழில் நுட்ப பூங்காவில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் உயிரி தொழில் நுட்ப பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார்.

6 views

தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் இயந்திரத்தை நிறுத்திய இளைஞர் மீது வழக்குப்பதிவு

விவசாயிகள் போராட்டத்தில் அரியானாவை சேர்ந்த இளைஞர் நவ்தீப் சிங், விவசாயிகள் மீது பீய்ச்சி அடிக்கப்பட இருந்த தண்ணீரை நிறுத்தினார்.

11 views

வெளிநாட்டில் இருந்து மருந்து இறக்குமதி செய்யும் உரிமம் நீட்டிப்பு - மத்திய சுகாதாரத் துறை அரசாணை வெளியிட்டு அறிவுரை

மருந்து நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து மருந்து இறக்குமதி செய்யும் உரிமத்தை நீட்டித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

13 views

பாமாயில் இறக்குமதி வரி 10% குறைப்பு - இந்திய சந்தையில் விலை குறைய வாய்ப்பு

பாமாயில் இறக்குமதி வரியை மத்திய அரசு 10 சதவீதம் வரை குறைத்திருப்பதால், இந்திய சந்தையில் பாமாயில் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.