மும்பை பயங்கரவாத தாக்குதல் விசாரணை: புதிய பயங்கரவாதிகள் பட்டியலை வெளியிட்ட பாகிஸ்தான் - இந்தியா கடும் கண்டனம்
பதிவு : நவம்பர் 13, 2020, 05:44 PM
மும்பை பயங்கரவாத தாக்குதல் விசாரணையில் மூளையாக செயல்பட்டவர்கள் பெயரை பாகிஸ்தான் சதிதிட்டத்துடன் நீக்கியுள்ளது என இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பைக்குள் கடல் வழியாக நுழைந்து, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய காட்டு மிராண்டித்தனமான தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இவ்விவகாரத்தில் சர்வதேச நாடுகள் மூலம் இந்தியா கொடுத்த நெருக்கடியால் விசாரிப்பதாக கூறிய பாகிஸ்தான், இன்று வரையில் விசாரணையை முடிக்காமல் குற்றவாளிகளை எல்லாம் விடுவித்து இழுத்தடித்து வருகிறது. தற்போது இந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் என்று ஒரு புதிய பட்டியலை அந்நாட்டு விசாரணை முகமை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை நிராகரித்து உள்ள இந்தியா, மூளையாக செயல்பட்டவர்கள் பெயரை எல்லாம் பாகிஸ்தான் சதிதிட்டத்துடன் நீக்கியுள்ளது என கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பேசுகையில், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த சில பயங்கரவாதிகள் பெயரை பாகிஸ்தான் பட்டியலில் இணைத்து இருந்தாலும், தாக்குதலை நடத்த மூளையாக செயல்பட்டவர்கள் மற்றும் சதிதிட்டம் தீட்டியவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளனர் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

258 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

211 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

155 views

பிற செய்திகள்

வெளிநாட்டில் இருந்து மருந்து இறக்குமதி செய்யும் உரிமம் நீட்டிப்பு - மத்திய சுகாதாரத் துறை அரசாணை வெளியிட்டு அறிவுரை

மருந்து நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து மருந்து இறக்குமதி செய்யும் உரிமத்தை நீட்டித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

10 views

பாமாயில் இறக்குமதி வரி 10% குறைப்பு - இந்திய சந்தையில் விலை குறைய வாய்ப்பு

பாமாயில் இறக்குமதி வரியை மத்திய அரசு 10 சதவீதம் வரை குறைத்திருப்பதால், இந்திய சந்தையில் பாமாயில் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

17 views

அரசு மருத்துவர்களுக்கு தமிழக அரசு 50 சதவீத இட ஒதுக்கீடு - நடப்பாண்டு வழங்காமல் சேர்க்கையை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பாண்டு வழங்காமல் சேர்க்கையை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

23 views

விவசாயிகளின் டெல்லி சலோ பேரணி - டெல்லி நுழைவாயிலில் உச்சகட்ட பாதுகாப்பு

டெல்லி சலோ பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், பரபரப்பு நிலவுகிறது.

8 views

கால்பந்தாட்ட வீரர் மரடோனாவுக்கு மணல் சிற்பி அஞ்சலி

கால்பந்தாட்ட வீரர் மரடோனாவின் மறைவுக்கு உலக முழுவதும் உள்ள ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில், மரடோனாவுக்கு மணல் சிற்பம் வடித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

40 views

ஆம்பேர் கோட்டையில் தொடங்கியது யானை அம்பாரி ஊர்வலம்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஆம்பேர் கோட்டையில், யானை மீதான அம்பாரி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.