இளம்பெண் மீது ஆசிட் வீசிய கற்பழிப்பு குற்றவாளி

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், கற்பழிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் இளம்பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண் மீது ஆசிட் வீசிய கற்பழிப்பு குற்றவாளி
x
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், கற்பழிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் இளம்பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நீதிமன்ற அலுவலகம் முன்பு இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆக்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் - கையில் கிடைத்ததை எடுத்து வீசி தாக்குதல்

உத்தரபிரதேச மாநிலம் அலிகார்க் பகுதியில் இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. கையில் கிடைத்ததை எடுத்து இரு தரப்பினரும் மாறி மாறி வீசினர். இதில் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்தினர். இந்த மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஷ்மீர் குங்குமப்பூ ஆன்லைன் ஏலத்திற்கான இணையதளம் - இடைத்தரகர்களால் ஏற்படும் இழப்பை தவிர்க்க முயற்சி

காஷ்மீர் குங்குமப்பூவை ஆன்லைனில் ஏலம் விடுவதற்கான இணையதளத்தை காஷ்மீர் விவசாய இயக்குனரகம் தொடங்கி வைத்தது. காஷ்மீர் குங்குமப் பூ குறித்து விளம்பரபடுத்துவதற்கும், விவசாயிகளின் தரத்தை உயர்த்தவும் இந்த ஆன்லைன் ஏல முறை உதவும் என கூறப்படுகிறது. இதனால் இடைத்தரகர்கள் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பு தவிர்க்கப்படும் என்றும், இதன் மூலம் விவசாயிகள் நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

35 கலைஞர்கள் இணைந்து ஓவியம் வரைந்து அசத்தல் - பார்ப்பவர்களை மயக்கும் அழகிய கோலங்கள்

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், தீபாவளி பண்டிகையை ஒட்டி 35 ஓவிய கலைஞர்கள் இணைந்து 75க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்தனர். இயற்கை காட்சிகள், நடிகர் நடிகைகள் என வித விதமான கோலங்களை இவர்கள் தீட்டினர். இந்த ஓவியங்கள் பார்ப்பவர்களின் கண்களை கொள்ளை அடிக்கும் வண்ணத்தில் ரம்மியமாக காட்சி அளித்தன.


Next Story

மேலும் செய்திகள்