"தமிழகத்துக்கான தண்ணீரை உரிய நேரத்தில் வழங்க வேண்டும்" - கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்

தமிழகத்துக்கான தண்ணீரை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என, காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்துக்கான தண்ணீரை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் - கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
x
காவிரி நதிநீர் பங்கீடு, பிரச்சினைகள் பற்றி விவாதிப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்று குழுவின் 38-வது கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் திருச்சி மண்டல நீர்வள ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியன், உறுப்பினர் செயலாளர் பட்டாபிராமன், திருச்சி மண்டல நீர்வள ஆதார அமைப்பின் கண்காணிப்பு பொறியாளர் திருவேட்டை செல்லம் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் வானிலை, மழைப்பொழிவு விவரங்கள், அணைகளுக்கு நீர்வரத்து, நீர் இருப்பு போன்ற விஷயங்கள் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இது தொடர்பான புள்ளி விவரங்களை அதிகாரிகள் சமர்ப்பித்தனர். ஏற்கனவே உள்ள உத்தரவுகளின்படி வரும் காலங்களிலும் தமிழகத்துக்கான தண்ணீரை உரிய காலக்கட்டத்தில் வழங்க வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்