கேரள தங்க கடத்தல் கும்பலில் வலுக்கும் பிரச்சினை - தலைமை செயலகத்தில் இருந்தபடி உதவி செய்த கும்பல்

கேரள தங்க கடத்தல் கும்பலுடன் தலைமைச் செயலகத்தில் இருந்து ஒரு கும்பல் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள தங்க கடத்தல் கும்பலில் வலுக்கும் பிரச்சினை - தலைமை செயலகத்தில் இருந்தபடி உதவி செய்த கும்பல்
x
தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள ஐஏஎஸ் அதிகாரியான சிவசங்கரனை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில், லைப் மிஷன் திட்டம் தொடர்பாக 36 டெண்டர்கள் விடப்பட்ட நிலையில், 26 டெண்டர்கள் இரு நிறுவனங்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டதாக தெரியவந்தது. டெண்டர் விடுவதற்கு முன்பே சிவசங்கரன், ஸ்வப்னாவிடம் இதுகுறித்த ரகசிய தகவல்களை பரிமாறிக் கொண்டதாக தெரியவந்தது. இந்த தகவல்களை எல்லாம் அமலாக்கத் துறையினர் மனுவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்வப்னா சுரேஷின், வங்கி லாக்கரில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் லைஃப் மிஷன் திட்டம் தொடர்பான கமிஷன் தொகை எனவும் இத்திட்டத்தில் சிவசங்கரனோடு மேலும் தொடர்பில் உள்ளவர்கள் குறித்து சிறையில் வைத்து ஸ்வப்னா சுரேஷிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாகவும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவில் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. 
 


Next Story

மேலும் செய்திகள்