பீகார் அரசியலின் சாணக்கியர் நிதிஷ்குமார்...

பீகார் அரசியலின் சாணக்கியர் என்று அழைக்கப்படும் நிதிஷ்குமார் அரசியலில் கடந்து வந்த பாதையை, இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
பீகார் அரசியலின் சாணக்கியர் நிதிஷ்குமார்...
x
பீகார் அரசியலின் சாணக்கியர் என்று அழைக்கப்படும் நிதிஷ்குமார் அரசியலில் கடந்து வந்த பாதையை, இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
1975-ஆம் ஆண்டில் நெருக்கடி நிலைக்கு பின்னர் இந்திரா காந்தியை ஆட்சியில் இருந்து வெளியேற்றியவர் ஜே.பி என்று அழைக்கப்பட்ட 'லோக் நாயக்' ஜெயபிரகாஷ் நாராயண். 

அவரது செயல்பாட்டில் ஈர்ப்புக் கொண்ட நிதிஷ்குமார், 1974-ஆம் ஆண்டு, அரசு மின் பொறியாளார் பதவியை உதறிவிட்டு அரசியலுக்குள் நுழைந்தார்.  நாடு முழுவதும் காங்கிரஸ் எதிர்ப்பு அலை வீசிய போதும், 1977ஆம் ஆண்டு பீகார் தேர்தலில் ஹர்னயாத் தொகுதியில் நின்று தோல்வியை தழுவினார் நிதிஷ் குமார். ஜனதா கட்சி அரசு, மத்தியில் தோல்வியை தழுவிய பின்னரும்,1980ஆம் ஆண்டு தேர்தலிலும் அவர் தோல்வியடைந்தார்.

ஆனால், அதே காலக்கட்டத்தில் அரசியலுக்கு வந்த லாலு பிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வானுக்கு 1977-ஆம் ஆண்டு மக்களவையில் நுழைவதற்கு வெற்றி வாய்ப்பளித்தது. நிதிஷ் குமாருக்கு வெற்றி என்பது, 1985ஆம் ஆண்டு பீகார் தேர்தலில் காலதாமதமாகத்தான் கிடைத்தது.

பின்னர் ஜனதா கட்சி உடைந்து வி.பி.சிங் தலைமையில் ஜனதா தளம் உருவானது.  அக்கட்சியில் தெளிவான எண்ணமும், பேச்சு திறமையும் கொண்டிருந்த நிதிஷ் குமார், 1989ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பீகாரில் காங்கிரஸ் வேட்பாளரான, ராம்லகான் சிங்கை தோற்கடித்து மக்களவைக்கு சென்றார். 

இதனையடுத்து தான் அரசியலில் சாணக்கியர் என்ற புகழுக்கு அஸ்திவாரமிட தொடங்கினார் நிதிஷ்குமார். பல்வேறு தடைகளைத் தாண்டி, பீகாரின் முதலமைச்சராக கடந்த 15 ஆண்டுகளாக இருந்து வருகிறார். அரசியல் தெளிவும், சணக்கியத்தனமும் கொண்ட நிதிஷ்குமார், இந்த தேர்தலில் வெற்றி பெறுவாரா என்பது, இன்று தெரிந்து விடும்.


Next Story

மேலும் செய்திகள்