நகை சேமிப்பு திட்டம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி புகார் - நகைக்கடை உரிமையாளரான கமருதீன் எம்.எல்.ஏ. கைது

கேரளாவில் சேமிப்பு திட்டம் நடத்தி பல கோடி மோசடி செய்ததாக நகைக்கடை உரிமையாளரான கமருதீன் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.
நகை சேமிப்பு திட்டம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி புகார் - நகைக்கடை உரிமையாளரான கமருதீன் எம்.எல்.ஏ. கைது
x
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் கமருதீன் நகைக்கடை நடத்தி வருகிறார். அக்கடையில்  தங்க நகை சேமிப்பு திட்டத்தின் கீழ் 800க்கும் மேற்பட்டோரிடம் 150 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் பலகட்ட விசாரணை மேற்கொண்டனர். 
இந்நிலையில் கமருதீனை விசாரணைக்காக அழைத்து காவல் துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.  நூற்றுக்கும் மேற்பட்டோர் அளித்துள்ள புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் 13 கோடி ரூபாய்க்கு  மோசடி நடைபெற்றுள்ளது உறுதியாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.  


Next Story

மேலும் செய்திகள்