யார் இந்த புஸ்ஸி ஆனந்த்?

விஜய்யிடம் இருந்து தன்னை பிரிக்க புஸ்ஸி ஆனந்த் என்பவர் சூழ்ச்சி செய்வதாக, எஸ்.ஏ.சந்திரசேகர் குற்றம்சாட்டி இருக்கும் நிலையில், யார் இந்த புஸ்ஸி ஆனந்த்?
யார் இந்த புஸ்ஸி ஆனந்த்?
x
புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் பிரமுகருமான மறைந்த அஷ்ரப்பின் உதவியாளராக பணியாற்றியவர் புஸ்ஸி ஆனந்த். அப்போது, புதுச்சேரி மாநில விஜய் ரசிகர் மன்ற கவுரவ தலைவராக இருந்து வந்த புஸ்ஸி ஆனந்த், பின்னர் தலைவரானார்.2006ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் புஸ்சி தொகுதியில் போட்டியிட்டு, முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். இதனால் புஸ்சி ஆனந்த் என அழைக்கப்பட்டார்.

எம்எல்ஏவாக இருந்தாலும் விஜய் மன்ற தலைவராக நீடித்து வந்தார்.
தொடர்ந்து, புதுச்சேரியில் 2010ஆண்டு  நடைபெற்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு ஆனந்த் தோல்வி அடைந்தார். 

பின்னர் நடிகர் விஜய், புஸ்சி ஆனந்திற்கு, அகில இந்திய விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளர் பதவியை அளித்தார்.2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு மீண்டும் தோல்வி அடைந்த ஆனந்த், அதன்பிறகு, முழுமையாக விஜய் மக்கள் இயக்க பணியை தற்போது வரை கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஆதரவாளர்கள் நாளைய முதல்வரே, வருங்கால முதல்வரே என்று நடிகர் விஜய்யை அரசியலுக்கு இழுக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டினார்கள்.இதனால் விஜய் மக்கள் இயக்கத்தின் புஸ்ஸி ஆனந்த், எஸ்.ஏ.சி யின் ஆதரவாளர்களை கட்சி பொறுப்பில் இருந்து விலக்குவதாக அறிக்கை வெளியிட்டார்.அப்போது அதிருப்தி தெரிவித்த எஸ்.ஏ.சி, தனது மகன் விஜய்யை சுற்றி கிரிமினல் இருக்கிறார்கள் என்றும்,

அதிலிருந்து தனது மகனை மீட்பது, தந்தையாகிய தனது கடமை என்றும் கூறினார்.எஸ்.ஏ.சி யின் ஆதரவாளர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் அளவிற்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் சென்றனர்.விஜய் மக்கள் இயக்கம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஒரு அணியாகவும், எஸ்.ஏ.சி தலைமையில் ஒரு அணியாகவும் செயல்படுவதே பிரச்சினைகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்