சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக கேரள அறநிலை துறை அமைச்சர் விளக்கம்

கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தால் சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுப்பதாக கேரள அறநிலை துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக கேரள அறநிலை துறை அமைச்சர் விளக்கம்
x
கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தால் சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுப்பதாக கேரள அறநிலை துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். சபரிமலையில் மண்டல பூஜை மற்றும்  மகரவிளக்கு திருவிழா வரும் 16 ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக தென்மாநிலங்களின் அமைச்சர்கள் கூட்டம் காணொலிக் காட்சி மூலம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில்  தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர் கலந்து கொண்டனர். அப்போது சபரிமலையில் பின்பற்றப்பட வேண்டிய கொரோனா தொடர்பான நிபந்தனைகள் குறித்து தமிழ்நாட்டில் விரிவான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்