கேரள நடிகை கடத்தல் வழக்கு - வரும் 16ம் தேதி வரை விசாரணைக்கு தடை
பதிவு : நவம்பர் 07, 2020, 09:16 AM
கேரளாவில் பிரபல நடிகை கடத்தல் தொடர்பான வழக்கை விசாரிப்பதற்கான தடையை, வரும் 16ஆம் தேதி வரை நீட்டித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரளாவில் நடிகை கடத்தப்பட்டது தொடர்பான வழக்கில் நடிகர் திலீப்பை 8ஆவது பிரதியாக சேர்த்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நீதிமன்றத்தில்  நடிகர் திலீப்புக்கு எதிராக, கடத்தப்பட்ட நடிகை அளித்த வாக்குமூலம் முழுமையாக பதிவு செய்யப்படவில்லை எனவும், அதில் குளறுபடி இருப்பதால் விசாரணை நீதிமன்றத்தை மாற்ற வேண்டும் எனவும் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், வாக்குமூலத்தில் சாட்சிகள் கூறிய அனைத்து விஷயங்களும் பதிவு செய்யப்படவில்லை என கேரளா அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, 6ஆம் தேதி வரை கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டாம் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், நேற்று இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம் வரும் 16ஆம் தேதி வரை தடையை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது. 

தொடர்புடைய செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

414 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

262 views

மெழுகுவர்த்தி ஏற்றி விவசாயிகள் போராட்டம் - "ஸ்டேன்ட்"களாக மாறிய போலீசார் தடுப்புகள்

டெல்லி எல்லையில் போலீசார் அமைத்துள்ள தடுப்புகளில் மெழுகுவர்த்தி ஏற்றி விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

15 views

பிற செய்திகள்

தமிழகத்தின் நவம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் - ரூ.7,084 கோடி

நவம்பர் மாத மொத்த ஜிஎஸ்டி வருவாயாக ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 963 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

11 views

5ஜி சேவை விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் - எரிக்சன் நிறுவனத்தின் அறிக்கையில் தகவல்

தற்போது பயன்பாட்டில் உள்ள 4ஜி அலைபேசி சேவைகளுக்கு அடுத்த கட்டமாக, 5ஜி சேவைகள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

259 views

கனடா தலைவர்களின் கருத்து தேவையற்றது - இந்திய வெளியுறவுத் துறை கண்டனம்

இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து கனடா தலைவர்களின் கருத்து, தவறான தகவல் மட்டுமின்றி அதை தேவையற்றதும் கூட என்று, வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

15 views

காசிப்பூரில் தடுப்புகளை அகற்ற முயன்ற விவசாயிகள் - போலீசார் தடுத்து வருவதால் பதற்றம்

பிற்பகல் 3 மணிக்கு விவசாய சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைத்துள்ள நிலையில், டெல்லிக்கு நுழையும் பகுதிகளில் எல்லாம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

10 views

இன்று உலக எய்ட்ஸ் நோய் தடுப்பு தினம் - கடற்கரையில் விழிப்புணர்வு மணல் சிற்பம்

பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில் விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

11 views

பா.ஜ.க-டி.ஆர்.எஸ் தொண்டர்கள் மோதல் - பா.ஜ.க எம்.பியின் கார் கண்ணாடி உடைப்பு

தெலங்கானா தலைநகர் ஐதராபாத் அருகே பா.ஜ.க- டி.ஆர்.எஸ் கட்சி தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.