யூடியூப் வீடியோ மூலம் வைரலான முதியவர் - வீடியோ எடுத்தவர் மீதே புகார்

டெல்லியில் உணவுக் கடை நடத்தி வரும் முதியவர் கந்த பிரசாத் சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் பிரபலமானார்.
யூடியூப் வீடியோ மூலம் வைரலான முதியவர் - வீடியோ எடுத்தவர் மீதே புகார்
x
டெல்லியில் உணவுக் கடை நடத்தி வரும் முதியவர் கந்த பிரசாத் சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் பிரபலமானார். "பாபா கா தபா" என்ற பெயரில் அவரது வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் டிரண்ட் ஆனது. இந்நிலையில், அந்த டெல்லி முதியவர், தனக்கு நிதி திரட்டுவதாக கூறி வீடியோ எடுத்த கவுரவ் வாசன் என்பவர் பண மோசடி செய்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார். வீடியோ எடுத்த கவுரவ் வாசன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் புகாரில் தெரிவித்து உள்ளார். மேலும் இது தொடர்பாக டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்