கோவேக்சின் தடுப்பூசி : மூன்றாம் கட்ட சோதனை - நெறிமுறை குழுவிடம் அனுமதி கோரும் டெல்லி எய்ம்ஸ்

கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனையை தொடங்க, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை திட்டமிட்டுள்ளது.
கோவேக்சின் தடுப்பூசி : மூன்றாம் கட்ட சோதனை - நெறிமுறை குழுவிடம் அனுமதி கோரும் டெல்லி எய்ம்ஸ்
x
கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனையை தொடங்க, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்தும் கோவேக்சின் தடுப்பூசியின், மூன்றாம் கட்ட பரிசோதனைக்கான அனுமதியை பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த வாரம் பெற்றது. இந்நிலையில், தன்னார்வலருக்கு தடுப்பூசியை பயன்படுத்தும் மூன்றாம் கட்ட சோதனைக்கு, நெறிமுறை குழுவிடம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அனுமதி கேட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் தன்னார்வலர்களை இதில் ஈடுபடுத்த உள்ளதாக, டெல்லி எய்ம்ஸ் தரப்பு தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்