சமையல் எரிவாயு விநியோகத்தின் போது கூடுதல் கட்டணமா... ? - ஆய்வுநடத்த நீதிமன்றம் உத்தரவு

கேஸ் ஏஜென்ஸிகள் சிலிண்டர் வினியோகிக்கும் போது கூடுதல் கட்டணம் வசூலிக்கிறதா என திடீர் சோதனை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமையல் எரிவாயு விநியோகத்தின் போது கூடுதல் கட்டணமா... ? - ஆய்வுநடத்த நீதிமன்றம் உத்தரவு
x
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்க, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேஸ் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை அன்னனூரைச் சேர்ந்த லோகரங்கன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்க, விநியோகம் செய்வோரை ஏஜென்ஸிகள் நிர்பந்திப்பதாக குற்றம்சா​ட்டினார். 500 கோடி ரூபாய்க்கு மேல் மக்களிடம் சுரண்டுவதாகவும் புகார் கூறினார். மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில், எரிவாயு சிலிண்டர் வினியோகம் செய்யும்போது, கூடுதல் கட்டணம் வசூலித்தால் விநியோக நிறுவனத்துக்கு அபராதம் விதிப்பதாகவும், முறைகேடான ஏஜென்ஸிகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும், எண்ணெய் நிறுவனம் தரப்பில் விளக்கம் கூறப்பட்டது. இதை ஏற்கமறுத்த நீதிபதிகள், எண்ணெய் நிறுவனங்கள் திடீர் சோதனையில் ஈடுபட வேண்டும் என்றும், கியாஸ் ஏஜென்சிகளின் மீது வந்த புகார்கள் எத்தனை, எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஜனவரி 8ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்