"அண்டை நாடுகளுடன் நல்ல உறவையே இந்தியா விரும்புகிறது" - ராஜ்நாத் சிங் தகவல்
பதிவு : அக்டோபர் 25, 2020, 10:16 AM
மேற்கு வங்கம் மற்றும் சிக்கிமில் டார்ஜிலிங்கின் சுக்னாவில் உள்ள 33-வது படைப் பிரிவின் தலைமை அலுவலகத்தில் கலாச்சார நிகழ்வு நடைபெற்றது. இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
மேற்கு வங்கம் மற்றும் சிக்கிமில் டார்ஜிலிங்கின் சுக்னாவில் உள்ள 33-வது படைப் பிரிவின் தலைமை அலுவலகத்தில் கலாச்சார நிகழ்வு நடைபெற்றது. இதில்  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், இந்தியா எப்போதும் தனது அண்டை நாடுகளுடன் நல்ல உறவை விரும்புகிறது என்று தெரிவித்தார். நமது நாட்டு  எல்லைகள், ஒருமைப்பாடு மற்றும் உலகளாவிய தன்மையைப் பாதுகாக்க நமது வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்ய வேண்டியிருந்தது என்பதையும் ராஜ்நாத் சிங் அப்போது சுட்டிக்காட்டினார்.  கால்வானில் பீகார் ரெஜிமென்ட்டின் 20 வீரர்கள், தாய் நாட்டைப் பாதுகாக்க தியாகம் செய்ததையும் அப்போது பாதுகா​ப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நினைவு கூர்ந்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.