சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் களம் - வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக பெண்கள்
பதிவு : அக்டோபர் 24, 2020, 08:35 AM
பீகாரில் 3 கட்டங்களாக நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மாநிலத்தில் வெற்றி-தோல்வியை தீர்மானிக்கப் போகும் சக்திகளாக இளம்பெண் வாக்காளர்கள் விளங்குவார்கள் என கணிக்கப்படுகிறது.
சமூகத்திலும், வாழ்விலும் முக்கிய பங்காற்றும் பெண்கள் அரசியலிலும், அரசியல் சக்திகளை தீர்மானிப்பதிலும் பெரும் பங்காற்ற வேண்டும். அதுவே, ஜனநாயகத்தின் பலமாகும். இந்த கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இளம் பெண் வாக்காளர்கள் இருப்பார்கள் என கணிக்கப்படுகிறது. மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையில் இளம் பெண்கள் இந்த சட்டப் பேரவை தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்று உள்ளனர். குறிப்பாக, முசாபர்பூர், மேற்கு சம்பாரண், கிழக்கு சம்பாரண், வைஷாலி, சீதாமரி, தர்பங்கா உள்ளிட்ட மாவட்டங்களில் இளம் பெண் வாக்காளர்கள் தேர்தல் வெற்றி-தோல்விகளை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். தேர்தலில் பெண் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும், மகளிர் மேம்பாட்டு திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்த வேண்டும். பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு விடுதி வசதியை செய்து தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை இளம் பெண்கள் முன்வைக்க தொடங்கி உள்ளனர்.  அவர்களுடைய இந்த கோரிக்கைகள் தற்போது அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளன.  பாலின வேறுபாடு அதிகமுள்ள மாநிலம் எனக் கூறப்படும் பீகாரில் பெண்கள் மாற்றத்திற்காக வாக்களிக்க தொடங்கிவிட்டனர். கடந்த 2015 சட்டப்பேரவைத் தேர்தலிலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் ஆண்களைவிடவும் பெண்களே அதிகமாக தங்களுடைய வாக்கை பதிவு செய்துள்ளனர். இப்போதைய தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக பெண்கள் சக்தி உருவெடுத்துள்ளது ஜனநாயகத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

(11/11/2020) ஆயுத எழுத்து - வேல் யாத்திரையும் ... அரசியல் முத்திரையும்...

சிறப்பு விருந்தினர்களாக : லட்சுமணன்-பத்திரிகையாளர் || சுமந்த் சி ராமன்-அரசியல் விமர்சகர் || கரு.நாகராஜன்-பாஜக || குறளார் கோபிநாத்-அதிமுக

78 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

70 views

(05/11/2020) ஆயுத எழுத்து - வேல் யாத்திரை : ஆன்மிகமா ? அரசியலா ?

சிறப்பு விருந்தினர்களாக : நரேந்திரன், பா.ஜ.க/புகழேந்தி, அதிமுக/பாலாஜி, விசிக/சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர்

65 views

சைதாப்பேட்டையில் ஸ்டாலின் ஆய்வு - பாய் உள்ளிட்ட நிவாரண பொருள் விநியோகம்

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

15 views

பிற செய்திகள்

கொரோனாவுக்கு பாஜக எம்.எல்.ஏ. மரணம் - 21 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநில பாஜக தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கிரண் மகேஷ்வரி கொரோனாவால் உயிரிழந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

19 views

"விவசாயிகளின் போராட்டம் அரசியல் நோக்கம் கொண்டதல்ல" - உள்துறை அமைச்சர் அமித்ஷா

வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை, அரசியல் நோக்கம் கொண்டது என்று, ஒரு போதும் கூறமாட்டேன் என, பாஜகவின் மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா கூறியுள்ளார்.

203 views

கார்த்திகை பூர்ணிமா பண்டிகை : 51 ஆயிரம் விளக்குகளால் ஜொலித்த அயோத்தி ராமர் கோயில்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் கார்த்திகை பூர்ணிமா பண்டிகையையொட்டி 51 விளக்குகள் ஏற்றப்பட்டன.

27 views

உலகிற்கே கொரோனா தடுப்பூசி மலிவான விலையில் கிடைக்கும்

கொரோனா தடுப்பூசி மேம்பாட்டை துரிதப்படுத்த, கோவிட் சுரக்‌ஷா திட்டத்திற்கு 900 கோடி ரூபாய்க்கான நிதித் தொகுப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.

1943 views

வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லி சலோ பேரணி : புராரி மைதானத்திற்கு செல்ல முடியாது - விவசாயிகள் திட்டவட்டம்

டெல்லியில் உள்ள புராரி மைதானத்திற்கு செல்ல முடியாது என, விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

280 views

பம்பை - சன்னிதானம் இடையே ரோப்வே - சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு

சபரிமலையில் பம்பையில் இருந்து சன்னிதானம் வரையில் ரோப்வே கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.

197 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.