ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு - 78 நாட்கள் ஊதியம் போனஸ் ஆக வழங்கப்படும்

நாடு முழுவதும் உள்ள11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு - 78 நாட்கள் ஊதியம் போனஸ் ஆக வழங்கப்படும்
x
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மொத்தம் 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3,737 கோடி ரூபாய் போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்படும் போனஸ் குறித்து ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி,  11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு  78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2081.68 கோடி ரூபாய்  செலவாகும் எனவும் ஒரு ஊழியருக்கு அதிகபட்சமாக17 ஆயிரத்து 951 ரூபாய் வரை போனஸ் கிடைக்கும் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா காலத்தில் புலம் பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் ரயில்வே ஊழியர்கள் பணியாற்றிவுள்ளதாக, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரயில்வே ஊழியர்கள் மேலும் சிறப்பாக பணியாற்றுவதற்கு இந்த போனஸ் அறிவிப்பு ஊக்குவிப்பாக இருக்கும் எனவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்