அரியானா இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர் அறிவிப்பு

அரியானா மாநில இடைத்தேர்தலில் பிரபல மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் பாரதிய ஜனதா கட்சி சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளார்.
அரியானா இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர் அறிவிப்பு
x
அரியானா மாநில இடைத்தேர்தலில் பிரபல மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் பாரதிய ஜனதா கட்சி சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் சோனிப்பட் மாவட்டம் பரோடா தொகுதியில் போட்டியிட உள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அவர் தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்த கிரிஷான் ஹூடா மறைவையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் இதுவரையில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்