ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா - கோலகலமாக நாளை தொடங்குகிறது

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை தொடங்குகிறது.
ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா - கோலகலமாக நாளை தொடங்குகிறது
x
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை தொடங்குகிறது. ஏழுமலையான் கோவிலில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழாவை கோலகலமாக கொண்டாட ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக வீதி உலாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் கல்யாண மண்டபத்தில் அருள்மிகு மலையப்ப சுவாமி புது புது பட்டாடை உடுத்தி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளிக்க உள்ளார்.   

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு - நாளை மறுநாள்  புதிய மேல்சாந்தி  தேர்வு

ஐப்பசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு, திறக்கப்பட உள்ளது. ஐந்து நாட்கள் நடை திறந்திருக்கும் நிலையில், தினமும், 250 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்கள். மொத்தம் 1,250 பக்தர்கள் சபரிமலை செல்ல தயாராகி உள்ளனர். நாளை மறுநாள்  புதிய மேல்சாந்தி  குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார். தற்போது பொறுப்பில் உள்ள சபரிமலை மேல்சாந்தி  சுதீர்  நம்பூதிரி, மாளிகைப்புறம் மேல்சாந்தி பரமேஸ்வரன்  நம்பூதிரியின் பதவிக்காலம் முடிய  உள்ளது. இதையடுத்து, அடுத்த ஓராண்டுக்கான புதிய மேல்சாந்திகளை தேர்வு செய்வதற்கான நேர்காணல் அக்டோபர் 5, 6ம் தேதிகளில்  திருவனந்தபுரம் தேவசம்போர்டு தலைமையகத்தில்  நடந்தது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள்  நாளை மறுநாள்  அக்டோபர் 17ம் தேதி  காலை 8 மணிக்கு சபரிமலை   கோயில் சன்னிதானத்தில் குழுக்கள் முறையில்  புதிய மேல்சாந்தியை  தேர்ந்தெடுக்க உள்ளனர்     


Next Story

மேலும் செய்திகள்