புதுச்சேரியில் மீண்டும் திறக்கப்பட்ட திரையரங்குகள் - கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்கிற்கு வராத ரசிகர்கள்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, புதுச்சேரியில் திரையரங்குகளுக்கு குறைந்த அளவிலான ரசிகர்களே வந்திருந்தனர்.
புதுச்சேரியில் மீண்டும் திறக்கப்பட்ட திரையரங்குகள் - கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்கிற்கு வராத ரசிகர்கள்
x
புதுச்சேரி மாநிலத்தில் ஏழு மாதங்களுக்குப் பிறகு மத்திய அரசு வழிகாட்டுதல் படி மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டன. காலை 11.45 மணிக்கு முதல் காட்சியில் படம் பார்க்க வந்த ரசிகர்கள் உடல் வெப்பநிலை சோதனை செய்யப்பட்டு, கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தபிறகே, அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியுடன் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. 

ஏழு மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால், டிக்கெட் விலையைக் குறைத்து, இலவச முகக்கவசமும் வழங்கியும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறைந்த அளவிலான ரசிகர்களே வந்திருந்தனர். இதனிடையே, திரையரங்குகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து துணை ஆட்சியர் சுதாகரும், தாசில்தார் ராஜேஷ் கண்ணாவும் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்