நேபாளம் செல்லும் இந்திய ராணுவத் தலைவர் - இந்திய ராணுவத் தலைவரை கௌரவிக்கும் நேபாள பிரதமர்

இந்திய ராணுவத்தின் தலைவர் முகுந்து நரவனே, வரும் நவம்பர் மாதம் நேபாளத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.
நேபாளம் செல்லும் இந்திய ராணுவத் தலைவர் - இந்திய ராணுவத் தலைவரை கௌரவிக்கும் நேபாள பிரதமர்
x
இந்திய ராணுவத்தின் தலைவர் முகுந்து நரவனே, வரும் நவம்பர் மாதம் நேபாளத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, முகுந்து நரவனேவுக்கு நேபாள ராணுவத்தின் கௌரவ தலைவர் என்கிற அந்தஸ்தை, நேபாள பிரதமர் வழங்குகிறார். பிப்ரவரி மாதமே நடைபெற இருந்த இந்தப் பயணம், பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தியப் பகுதிகள் சிலவற்றை நேபாள பகுதிகளாக அறிவித்து, நேபாள அரசு புதிய வரைபடம் வெளியிட்டதால் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவிவந்த நிலையில், இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்