கோவேக்சின் தடுப்பு மருந்து - இரண்டாம் கட்ட சோதனைக்குத் தயாராகும் பாரத் பயோடெக்

கோவேக்சின் தடுப்பு மருந்துக்கான இரண்டாம் கட்ட பரிசோதனை தொடர்பான முக்கிய முடிவை பாரத் பயோடெக் நிறுவனம் எடுத்துள்ளது.
கோவேக்சின் தடுப்பு மருந்து - இரண்டாம் கட்ட சோதனைக்குத் தயாராகும் பாரத் பயோடெக்
x
ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் இணைந்து கோவேக்சின் என்ற கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளன. இந்தத் தடுப்பு மருந்துக்கான முதற்கட்ட பரிசோதனை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. 

தேர்ந்தெடுக்கப்பட்ட 1,125 பங்கேற்பாளர்களில், 375 தன்னார்வலர்களிடம் சோதனை செய்ததில், நல்ல எதிர்ப்பாற்றல் கிடைத்தது. அதேசமயம், சிறிய அளவிலான காய்ச்சலும், லேசான உடல்வலியும் மட்டுமே ஏற்பட்டதால், இரண்டாம் கட்ட சோதனையில் தன்னார்வலர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க பாரத் பயோடெக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

சோதனையை விரைந்து முடிக்கும் விதமாக 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் உட்பட 380 பேருக்கு மட்டுமே சோதனை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையின் வெற்றிக்குப் பிறகு, முறையான அனுமதியுடன் மூன்றாம்கட்ட சோதனையை 30 ஆயிரம் பேரிடம் நடத்தவும், பாரத் பயோடெக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்