17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை - 22 நாட்களாக பண்ணை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை
பதிவு : அக்டோபர் 15, 2020, 01:16 PM
ஒடிசாவில் 17 வயது சிறுமியை கடத்தி 22 நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமி, பெற்றோரிடம் கோபம் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். பின்னர் தனது கிராமத்திலிருந்து கட்டாக்கிற்கு பேருந்தில் ஏறிச் சென்றுள்ளார். அங்கு சென்றதும் மனம் மாறி மீண்டும் வீட்டுக்கு திறம்ப பேருந்துக்குள் காத்திருந்துள்ளார். 
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர், சிறுமியை அவளது கிராமத்தில் விட்டுவிடுவதாக ஏற்றி சென்றுள்ளார். நம்பிக்கையுடன் ஏறிய சிறுமியை தன்னுடைய பண்ணை வீட்டிற்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு  22 நாட்களாக அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பண்ணை வீட்டு நிகழ்வுகளில் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள், வந்து சோதனையிட்ட போது சிறுமி மீட்கப்பட்டுள்ளார். உடனடியாக சிறுமியை மருத்துவமனையில் சேர்த்த போலீசார், விசாரணை தொடங்கினர். இவ்விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்துள்ள போலீசார், மற்றவர்களை தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

ஆந்திரா, தெலுங்கானாவில் வரலாறு காணாத மழை - கனமழைக்கு இதுவரை 28 பேர் பலி

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

344 views

"டிரம்பின் உடல்நிலை முன்னேற்றம் : மகிழ்ச்சி அளிக்கிறது" - டிரம்பின் தனிப்பட்ட மருத்துவர் தகவல்

அமெரிக்க அதிபர் டிரம்பின் உடல் நிலையில் மகிழ்ச்சி தரும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, அவரின் மருத்துவர் தெரிவித்து உள்ளார்.

39 views

ஐ.பி.எல்-ல் விளையாடுவதே சாதனை தான் - நடராஜன்

ஐ.பி.எல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வரும் சேலத்தை சேர்ந்த நடராஜன், டென்னிஸ் பால் தான் தன் வெற்றிக்கான ரகசியம் என கூறியுள்ளார்.

37 views

"பெண்களை மதிக்காத கட்சி காங்கிரஸ்" - ஜோதிர் ஆதித்ய சிந்தியா குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சி ஒரு போதும் பெண்களை மதி​த்தது கிடையாது என அண்மையில் அக்கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜ.க. வில் சேர்ந்துள்ள ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

21 views

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி தேர்வு - அமி கானி பேரட் தேர்வாக அதிக வாய்ப்பு

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக அமி கானி பேரட் தேர்வாக அதிக வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

9 views

ஓரின சேர்க்கையாளர் மற்றும் திருநங்கை எம்.பி.க்கள் - அதிகளவில் உறுப்பினர்களாக கொண்டு நியூசிலாந்து பாராளுமன்றம் சாதனை

உலகிலேயே அதிக ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகளை எம்.பி.க்களாக கொண்ட பாரளுமன்றமாக நியூசிலாந்து சாதனை படைத்துள்ளது.

8 views

பிற செய்திகள்

முதன்முறையாக குறைந்த கொரோனா இறப்பு விகிதம்

கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்பு குறைந்து வருவது, புதிய நம்பிக்கையை தருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

339 views

எளிமையாக நடந்து முடிந்த மன்னர் "தர்பார்"

உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழாவின் முக்கிய நிகழ்வான, சாமுண்டீஸ்வரி தேவியின் அம்பாரியை யானை சுமக்கும் நிகழ்ச்சி, ஆரவாரமின்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

25 views

ராணுவம் சார்பில் புறா பந்தயம் - புறாவுடன் பங்கேற்ற போட்டியாளர்கள்

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் ராணுவம் சார்பில் புறா பந்தயம் நடைபெற்றது.

6 views

"பீகாரில் வறுமை தலைவிரித்து ஆடுகிறது" - நிதிஷ்குமார் மீது தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

வெங்காய விலை 50 முதல் 60 ரூபாயாக விற்கப்பட்ட போது அதிகம் சத்தம் எழுப்பியவர்கள், தற்போது 80 ரூபாயை கடந்து 100 ரூபாய்க்கு விற்கும் போது வாய் மூடி மவுனியாக இருப்பது ஏன் என தேஜ்ஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

39 views

மெகபூபா அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றிய பாஜகவினர் - மெகபூபா கருத்துக்கு பாஜக பதிலடி

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள மெகபூபா முப்தியின் கட்சி அலுவலகத்தில் பாஜகவினர் தேசிய கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

826 views

சூடு பிடித்துள்ள பீகார் சட்டமன்ற தேர்தல் களம் - இன்றுடன் நிறைவு பெறுகிறது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம்

பீகார் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளதை அடுத்து, முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.